விபச்சார அழகிக்காக, சகோதரி திருமணத்திற்கு சேர்த்த பணம் அபேஸ்.. 'கிஸ் ஆப் லவ்' ராகுல் அட்டகாசம்
திருவனந்தபுரம்: விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்த மாடல் அழகி ஒருவரை விடுவிக்க சொந்த வீட்டையே சூறையாடி பணத்தை பறித்து சென்றார் ராகுல் பசுபாலன் என்று அவரது தந்தை பேட்டி அளித்துள்ளார்.
கேரளாவில் ஆன்லைன் விபசாரத்தில் ஈடுபட்ட 12 பேர் கும்பலை கேரள போலீசார் கடந்த வாரம் கைது செய்தனர். "ஆபரேசன் பிக் டாடி" என்று பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கையில் கேரளாவில் முத்தப்போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்திய ராகுல் பசுபாலன், அவரது மனைவியும், மாடல் அழகியுமான ரஷ்மி ஆகியோரும் சிக்கினர்.

இந்த கும்பல் பிடிபட்ட பின்பு இவர்களால் விபசாரத்தில் தள்ளப்பட்டவர்களில் சிறுமிகளும், குடும்பப் பெண்களும் பாதிக்கப்பட்ட தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆன்லைன் விபசாரத்திற்கு மூளையாக செயல்பட்ட ராகுல் பசுபாலன்-ரஷ்மி தம்பதியரை கண்டித்து பல்வேறு அமைப்பினரும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இதுபற்றி ராகுல் பசுபாலனின் தந்தை பசுபாலனை நிருபர்கள் சந்தித்து கருத்து கேட்டனர். அதற்கு அவர், "எங்கள் குடும்பம் மிகவும் ஏழ்மையானது. நான், கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வருகிறேன். கடந்த ஆண்டு முதல் ராகுலின் நடவடிக்கைகளில் பெருத்த மாற்றத்தை கண்டேன். வீட்டுக்கு ஒழுங்காக வருவதில்லை. ஏராளமான பெண்களுடன் தொடர்பில் இருந்தார்.
ராகுலுக்கு நெருக்கமான மாடல் அழகி ஒருவர் கர்நாடகாவில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். அவரை ஜெயிலில் இருந்து விடுவிக்க ராகுல் முயற்சி செய்தார். இதற்காக என்னிடம் பணம் கேட்டார். நான், கொடுக்க மறுத்தேன். எனது மகளின் திருமணத்திற்காக குருவி சேர்ப்பது போல் சேர்த்து வைத்த ரூபாய் 1.5 லட்சம் பணத்தை தன்னிடம் தந்து விடும்படி மிரட்டினார். அதற்கு நான் உடன்படாததால் வீட்டில் இருந்த பொருட்களை அடித்து உடைத்து சூறையாடினார்.
எங்களை மிரட்டி விட்டு பணத்தை எடுத்துச் சென்று விட்டார். அப்போதே அவரை கை கழுவி விட்டோம். அதற்கு பிறகும், வீட்டிற்கு வந்து மேலும் ரூபாய் 3 லட்சம் பணம் வேண்டுமென கேட்டார். எங்களிடம் பணம் இல்லையென்று திருப்பி அனுப்பினோம். அவர் பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தி கைது செய்யப்பட்டார் என்ற தகவல் எனக்கு அதிர்ச்சியை தரவில்லை. இது நான் எதிர்பார்த்ததுதான்" என்று தெரிவித்துள்ளார்.
-
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம்












Click it and Unblock the Notifications