'கே, லெஸ்பியன்' அமெரிக்க தூதரக அதிகாரிகளை பிடித்து உள்ளே போடுங்க.. யஷ்வந்த் சின்ஹா அதிரடி

இந்திய அரசும் கூட இதே பாணியில்தான் யோசிப்பதாக தெரிகிறது. இந்தியாவில் ஓரினச் சேர்க்கையை குற்றச் செயலாக உச்சநீதிமன்றம் சமீபத்தில்தான் தீர்ப்பளித்தது. இதை வைத்துக் கொண்டு அமெரிக்க தூதரக அதிகாரிகளில் யாரெல்லாம் கே, லெஸ்பியன் வேலையில் ஈடுபடுகிறார்களோ அவர்களைப் பிடிக்கலாமா என்ற யோசனையில் இந்திய அரசு இருப்பதாக தெரிகிறது.
இதே கருத்தை தற்போது சின்ஹாவும் எதிரொலித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அமெரிக்க தூதரக அதிகாரிகள் யாரெல்லாம் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுகிறார்களோ அவர்களையெல்லாம் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பு அதற்கு பக்க பலமாக இருக்கும். இந்திய அரசு இதை உடனடியாக செய்ய வேண்டும்.
கம்பானியன் என்ற பெயரில் பல அமெரிக்க தூதரக அதிகாரிகள் ஓரினச் சேர்க்கையில்தான் ஈடுபடுகின்றனர். இவர்களை ஒழிக்க இப்போது சரியான நேரம் கிடைத்துள்ளது. அமெரிக்காவில் குறைந்த ஊதியம் கொடுத்தால் குற்றம் என்றால், இங்கு ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவதும் குற்றச் செயல்தான். உச்சநீதி்மன்றமே அப்படித்தான் சொல்லியுள்ளது. எனவே நாமும் சட்டப்படி செயல்படலாமே.. அதில் எந்தத் தடையும், தயக்கமும் தேவையில்லை என்றார் சின்ஹா.
அமெரிக்க தூதரக அதிகாரிகள் பலரும் ஓரினச் சேர்க்கையாளர்கள்தான். பலர் இதை பகிரங்கமாகவே சொல்லியுள்ளனர். எனவே உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் இவர்கள் மீ்து நடவடிக்கை எடுத்து இந்தியாவின் பதிலடியைத் தரலாமா என்ற சீரியஸான யோசனையில் மத்திய அரசு இருப்பதாகவே தெரிகிறது. சட்டப்படி இதை அமெரிக்கர்களால் எதிர்க்கவும் முடியாது. மேலும் இந்திய துணைத் தூதர் தேவ்யானிக்கு தூதரக ரீதியிலான சலுகைகளைத் தர முடியாது என்று அமெரிக்க அரசு கூறியிருப்பது போல, இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கும் சலுகை காட்டாமல் வழக்குப் போட்டு அவர்களுக்குப் பதிலடி தருவது குறித்தும் அதிகாரிகள் மட்டத்தில் யோசனையில் இருப்பதாக தெரிகிறது.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், அமெரிக்க தூதரக அதிகாரிகளில் யாரெல்லாம் ஓரினச்சேர்க்கையாளர்கள் என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும். அவர்களின் பட்டியலே எங்கள் வசம் உள்ளது. இந்திய சட்டப்படி அவர்கள் மீது தாராளமாக நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications