மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மாவுக்கு கைது வாரண்ட்?
பெங்களூரு : மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமாரின் மனைவியும், படத்தயாரிப்பாளருமான பர்வதம்மாவுக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மறைந்த பிரபல கன்னட நடிகர் ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மா. இத்தம்பதிக்கு புனீத் ராஜ்குமார், சிவராஜ்குமார் மற்றும் ராகவேந்திரா ராஜ்குமார் என மூன்று மகன்கள் உள்ளனர். பர்வதம்மா படத்தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், தனது படங்களில் வேலை பார்த்தவர்களுக்கு பர்வதம்மா இ.எஸ்.ஐ., இன்சூரன்ஸ் உள்ளிட்ட சலுகைகளை செய்து தரவில்லை என கர்நாடக பிலிம்சேம்பர் ஆப் காமர்ஸ் சார்பில் போலீசில் புகார் அளிக்கப் பட்டிருந்தது. அந்த புகாரின் அடிப்படையில், பர்வதம்மாவிற்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, வருடத்தில் சில நாட்கள் மட்டுமே பணி புரியும் சில ஊழியர்களுக்கு எவ்வாறு இத்தகைய சலுகைகளை தயாரிப்பாளர்கள் செய்து தர இயலும் என நடிகை தாரா கேள்வி எழுப்பி இருந்தார்.
அதனடிப்படையில், அமைச்சர் பரமேஸ்வர் கூறுகையில், ‘இந்த சலுகைகள் திரைத் துறை ஊழியர்களுக்கு அரசே செய்து தரும்' என்றார்.
ஆனால், இதற்கு முன்னதாகவே பர்வதம்மாவிற்கு கைது வாரண்ட் அளிக்கப் பட்டு விட்டதாகத் தெரிகிறது. எனவே, பர்வதம்மா மீது மேற்கொண்டு நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படாது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications