2020-ல் இந்தியாவில் தாக்குதலுக்கு சதி- ஐ.எஸ். மனித வெடிகுண்டாக மாற முயன்ற புனே மாணவி திடுக் தகவல்!!
Subscribe to Oneindia Tamil
புனே: 2020ஆம் ஆண்டு இந்தியாவில் பயங்கர தாக்குதல் நடத்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக அந்த அமைப்பின் மனித வெடிகுண்டாக சேர முயன்ற புனேவைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவி திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.
ராஜஸ்தானில் அண்மையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மேலாளராக இருந்த சிராஜூதீன் என்ற கர்நாடாகாவைச் சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆட்சேர்க்கும் வேலையை சிராஜூதீன் செய்து வந்ததும் தெரியவந்தது.

சிராஜூதீனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த பிளஸ் 1 மாணி அவருடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அந்த மாணவியிடம் தீவிரவாத தடுப்பு போலீசார் விசாரணை நடத்தியபோது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்திருக்கின்றன.
- சிராஜூதீனிடம் தொடர்பில் இருந்த அந்த மாணவிக்கு இலங்கை, கென்யா, சிரியா உள்ளிட்ட ஐ.எஸ். ஏஜெண்டுகள் அறிமுகமாகியுள்ளனர்.
- ஐ.எஸ். இயக்கத்தின் மீது நம்பிக்கை ஏற்பட்டதைத் தொடர்ந்து ஜீன்ஸ், டி சர்ட் அணியும் பழக்கத்தை கைவிட்டு திடீரென பர்தாவை அணியும் பழக்கத்தை அந்த மாணவி கடைபிடித்து வந்திருக்கிறார்.
- ஐ.எஸ். இயக்க ஏஜெண்டுகளிடம் தாம் அந்த இயக்கத்தில் இணைந்து மனித வெடிகுண்டாக செயல்படவும் விரும்புவதாக கூறியுள்ளார்.
- அத்துடன் மருத்துவ கல்வி படிக்க வேண்டும் என்ற விருப்பத்தையும் ஐ.எஸ். ஏஜெண்டுகளிடம் அம்மாணவி தெரிவித்திருந்தார்.
- அவரது கோரிக்கையை ஏற்று சிரியாவில் மருத்துவ கல்லூரி ஒன்றில் அந்த மாணவி படிப்பதற்கான ஏற்பாடுகளை ஐ.எஸ். இயக்கம் செய்திருந்தது.'
- ஐ.எஸ். இயக்க ஏஜெண்டுகள், ஆதரவாளர்கள் என 200 பேருடன் அந்த மாணவி தொடர்பில் இருந்திருக்கிறார்.
- 2020ஆம் ஆண்டு இந்தியாவில் மிகப் பெரிய தாக்குதல் நடத்த ஐ.எஸ். இயக்கம் சதித் திட்டம் தீட்டியுள்ளதாகவும் அந்த நாசவேலைக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடப்பது தமக்கு தெரியும் எனவும் அவர் போலீசாரிடம் கூறியுள்ளார்.
- அந்த மாணவியின் எதிர்காலம் கருதி போலீசார் கவுன்சிலிங் கொடுக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications