பட்ஜெட்டுக்கு ஜேட்லி மனைவியின் மதிப்பெண் என்ன தெரியுமா?
மத்திய பட்ஜெட்டுக்கு நிதியமைச்சர் அருண்ஜேட்லியின் மனைவி சங்கீதா ஜேட்லி 9 மதிப்பெண்கள் கொடுத்திருக்கிறார்.
டெல்லி : நிதியமைச்சர் அருண்ஜேட்லி தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டிற்கு அவருடைய மனைவி சங்கீதா ஜேட்லி 10க்கு 9 மதிப்பெண் கொடுத்திருக்கிறார். மனித பிழை இருப்பதால் முழு 10 மதிப்பெண் கொடுக்கவில்லை என்று சங்கீதா ஜேட்லி கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை நேற்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்தார். அருண்ஜேட்லியின் அறிவிப்புகளை எதிர்பார்த்து நாட்டு மக்களே காத்திருந்தது போல அவருடைய குடும்பத்தாரும் ஜேட்லியின் பட்ஜெட் உரையை காண நாடாளுமன்றம் வந்திருந்தனர்.

ஜேட்லியின் மனைவி சங்கீதா ஜேட்லி, மகன் ரோகன் ஜேட்லி, அருண் ஜெட்லியின் சகோதரி மது பார்கவா உள்ளிட்டோர் நாடாளுமன்றம் வந்திருந்தனர். பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்தவாறு ஜேட்லியின் சுமார் 2 மணி நேர பட்ஜெட் உரையை கேட்டனர்.
பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சங்கீதா ஜேட்லி, என்னுடைய கணவர் தாக்கல் செய்த பட்ஜெட்டுக்கு 10-க்கு 9 மதிப்பெண் அளிப்பதாக தெரிவித்தார். இதில் சில மனித தவறுகள் நடந்திருப்பதால் 10-க்கு 10 மதிப்பெண் அளிக்கவில்லை என்றும் அவர் கூறினார். பட்ஜெட்டை காங்கிரஸ் குறை கூறியிருப்பதாக செய்தியாளர்கள் கேட்டதற்கு எதிர்க்கட்சிகளின் வேலையே குற்றங்களை கண்டுபிடிப்பது தான் என்றார்.
இதனைத் தொடர்ந்து மத்திய பட்ஜெட்டுக்கு ஜேட்லியின் சகோதரி மது பார்கவா 10-க்கு 10 மதிப்பெண் அளிப்பதாக தெரிவித்தார். பட்ஜெட் அனைவரையும் திருப்திபடுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டு உள்ளதாக பார்கவா கூறினார்.
இதே போன்று அருண்ஜேட்லியின் மகனும் தந்தையின் பட்ஜெட்டிற்கு முதல் மார்க் கொடுத்துள்ளார். ஜேட்லியின் மகன் ரோகன் ஜேட்லி இது எதிர்காலத்துக்கான சிறந்த பட்ஜெட் என்று கூறினார்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications