நிதி ஆயோக் கூட்டத்தை முதல்வர்கள் புறக்கணிப்பதா? அருண் ஜேட்லி கொந்தளிப்பு
டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டத்தை காங்கிரஸ் ஆளும் 9 மாநில முதல்வர்கள் உட்பட 12 முதல்வர்கள் புறக்கணித்தது கூட்டாட்சி தத்துவத்துக்கு ஏற்புடையது அல்ல என்று நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கண்டனம் தெரிவித்துள்ளார்.
நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டம் குறித்து ஆலோசிப்பதற்காக பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 12 மாநிலங்களின் முதல்வர்கள் கலந்து கொள்ளவில்லை.

காங்கிரஸ் ஆட்சி செய்யும் 9 மாநிலங்களின் முதல்வர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இவர்கள் தவிர தமிழக முதல்வர் ஜெயலலிதா, மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, ஒடிஷா முதல்வர் நவீன்பட்நாயக் ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
இன்றைய கூட்டத்தில் 16 மாநிலங்களின் முதல்வர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அருண் ஜேட்லி கூறியதாவது:
நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணித்த மாநில முதல்வர்கள் தங்கள் செயல்பாடு கூட்டாட்சி தத்துவத்துக்கு ஏற்புடையதா என்பதை சுய பரிசோதனை செய்வது நன்று.
கூட்டத்தில் கலந்து கொண்ட பல்வேறு மாநில முதல்வர்களும், நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை அமல்படுத்த தாமதிப்பது வளர்ச்சியை கட்டுப்படுத்துவதாகும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
சில மாநிலத்தின் முதல்வர்கள் இந்த சட்டத்தில் ஒன்று மத்திய அரசு அனைவரும் ஏற்கும் வண்ணத்தில் ஒருமித்த முடிவை எட்ட வேண்டும். இல்லையேல் மாநில அரசுகள் தங்களுக்கு ஏற்ப சட்டத்தை அமைத்துக் கொள்ள உரிமை அளிக்க வேண்டும் என யோசனை கூறியுள்ளனர்.
இவ்வாறு அருண்ஜேட்லி கூறினார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications