Arunachal Pradesh Lok Sabha Election Results Live : அருணாச்சல பிரதேசத்தில் வென்ற பாஜக
இட்டாநகர் : அருணாச்சல பிரதேசத்தில் 2 லோக்சபா தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நடந்த நிலையில், இரண்டையும் பாஜக வென்றுள்ளது.
நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் முக்கியமான மாநிலம் அருணாச்சல பிரதேசம். 2019ஆம் ஆண்டு முதலே பாஜக ஆட்சியில் உள்ளது. இரு நாட்களுக்கு முன் நடந்த சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் பாஜக 46 இடங்களில் வென்று ஆட்சியமைத்துள்ளது. தற்போது 2 லோக்சபா தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. கடந்த தேர்தலிலேயே பாஜக 2 தொகுதிகளிலும் வென்ற நிலையில், மீண்டும் பாஜக வெல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இம்முறை அருணாச்சல் மேற்கு லோக்சபா தொகுதியில் பாஜக சார்பாக கிரண் ரிஜிஜு, காங்கிரஸ் கட்சி சார்பாக நபம் துகி ஆகியோர் போட்டியில் உள்ளனர். அதேபோல் கிழக்கு அருணாச்சல் லோக்சபா தொகுதியில் பாஜக சார்பாக தபீர் காவ், காங்கிரஸ் கட்சி சார்பாக போசிராம் சிராம் ஆகியோர் களத்தில் உள்ளனர். தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் சூழலில், யாருக்கு வெற்றி என்பதை பார்க்கலாம்.
தபால் வாக்குகள் எண்ணப்பட்ட போது பாஜக 2 தொகுதிகளில் முன்னிலையில் இருந்த நிலையில், தற்போது மின்னணு வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அதில் காங்கிரஸ் ஒரு தொகுதியிலும், பாஜக ஒரு தொகுதியிலும் முன்னிலையில் உள்ளன. ஆனால் கடைசி சுற்று முடிவில் அருணாச்சல் கிழக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் தபீர் காவ் 1,45,581 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இவருக்கு பின் 2வது இடத்தில் போசிராம் சிராம் 1,15,160 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.
அதேபோல் அருணாச்சல் மேற்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் கிரண் ரிஜிஜு 2,05,417 வாக்குகள் பெற்று வெற்றியை பெற்றுள்ளார். இவரை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் நபம் துகி 1,04,679 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். இதன் மூலமாக அருணாச்சல பிரதேசத்தில் 2 தொகுதிகளிலும் பாஜக வென்றுள்ளது.












Click it and Unblock the Notifications