நேர்மையான அதிகாரிகள் என்னை தொடர்பு கொள்ளவும்: கெஜ்ரிவால் அழைப்பு
டெல்லி: நேர்மையான அதிகாரிகள் என்னைத் தொடர்பு கொள்ளவும், நான் அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்வேன் என அறிவித்துள்ளார் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால்.
வரும் சனிக்கிழமை காங்கிரஸ் ஆதரவுடன் டெல்லியில் ஆட்சி அமைக்க இருக்கிறது ஆம் ஆத்மி கட்சி. இந்நிலையில் தங்களது அரசில் நேர்மையான அதிகாரிகளைப் பணி அமர்த்தும் வேலையில் தீவிரமான உள்ளது ஆம் ஆத்மி.

அந்தவகையில், நேர்மையான அதிகாரிகள் தன்னைத் தொடர்பு கொண்டால் அவர்களுக்கு தங்கள் ஆட்சியில் பதவி உயர்வு வழங்குவது குறித்து பரிசீலிக்கப் படும் என ஆம் ஆத்மி கட்சித்தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
மேலும், இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது :-
நேர்மையான அதிகாரிகள் என்னை கடிதங்கள், இமெயில் மற்றும் குறுந்தகவல் மூலமாக தொடர்பு கொள்ளலாம். அவ்வாறு என்னைத் தொடர்பு கொள்ளும் அதிகாரிகளின் நேர்மையை பரிசீலித்து அவர்களுக்கு எங்கள் ஆட்சியில் பதவி உயர்வு வழங்கப் படும்.
மேலும், அரசு செயல்பாட்டில் அவர்களது உத்திகள் பற்றி முடிவெடுக்கப் படும். அதேபோல், தற்காலிக பணி நீக்கம் செய்யப் பட்ட நேர்மையான அதிகாரிகளின் மேல் முறையீடு செய்தால், அவர்களது ஓய்வு ஊதியம் மற்றும் மருத்துவ பண விவகாரங்கள் விரைவாக கிடைக்கப் படும் படி உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications