கேஜ்ரிவால் வீட்டு முன்பு அதிகரிக்கும் கூட்டம்.. பாதுகாப்புக்கு போலீஸ் வரவழைப்பு
காஸியாபாத்: டெல்லி முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள கேஜ்ரிவாலின் காஸியாபாத் வீட்டு முன்பு தினசரி நூற்றுக்கணக்கானோர் திரண்டு வருவதால் பாதுகாப்புக்காக போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் மெட்டல் டிடெக்டர் கருவியும் பொருத்தப்பட்டுள்ளது. உ.பி. போலீஸார் தவிர டெல்லி போலீஸாரும் சாதாரண உடையில் கேஜ்ரிவால் வீட்டைக் கண்காணித்து வருகின்றனர்.

கேஜ்ரிவாலின் வீடு டெல்லி அருகே, உ.பி. மாநிலத்துக்குட்பட்ட காஸியாபாத்தில் உள்ளது. கேஜ்ரிவால் முதல்வரானது முதல் வீட்டுக்கு பெரும் கூட்டம் கூடி வருகிறது. இன்று மிகப் பெரிய அளவில் கூட்டம் கூடி விட்டது. இதனால் கேஜ்ரிவால் வீட்டிலிருந்து போலீஸாருக்குத் தகவல் போனது. கூட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு போலீஸார் கேட்டுக் கொள்ளப்பட்டனர். இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து கூட்டத்தினரை ஒழுங்குபடுத்தினர்.
போக்குவரத்து உள்ளிட்டவற்றை உ.பி. போலீஸார் கவனிக்க, வீட்டுப் பாதுகாப்பை டெல்லி போலீஸார் பார்த்துக் கொண்டனர். மேலும் வீட்டுக்குச் செல்லும் வழியில் மெட்டல் டிடெக்டர் கருவியும் பொருத்தப்பட்டுள்ளது.
முதல்வராக பொறுப்பேற்றது முதல் காலையில் தனது வீட்டில் மக்களை சந்தித்து குறைகளைக் கேட்டு வருகிறார் கேஜ்ரிவால். இதனால்தான் இத்தனைக் கூட்டம் கூடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications