டெல்லி: சாராய கும்பலால் கொல்லப்பட்ட போலீஸ்காரர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சாராய கும்பலால் படுகொலை செய்யப்பட்ட போலீஸ்காரர் குடும்பத்துக்கு ரூ1 கோடி நிதி உதவி வழங்கப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

டெல்லியைச் சேர்ந்த போலீஸ்காரர் வினோத் குமார், கடந்த வாரம் ஆயத்தீர்வை அதிகாரிகளுடன் சாராய கும்பலை பிடிக்கச் சென்றார். அப்போது அக்கும்பல் தாக்கியதில் வினோத் குமார் உயிரிழந்தார்.

இந்நிலையில், அவருடைய குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதி உதவி வழங்கப்படும் என்று முத;ல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார். வினோத் குமாரின் மனைவிக்கு எழுதிய கடிதத்தில் கெஜ்ரிவால் இதை தெரிவித்துள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவடாவில் 2010ஆம் ஆண்டு மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் 75 சி.ஆர்.பி.எப். வீரர்கள் உயிரிழந்தனர். அவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ38 லட்சம் வழங்கியதே இதுவரையிலான மிகப் பெரிய நிதி உதவியாக இருந்து வந்தது. இந்நிலையில் சாராய வேட்டையில் படுகொலையான போலீஸ்காரர் குடும்பத்துக்கு ரூ1 கோடி நிதி உதவியை டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கொடுத்திருப்பது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+