லெப்டினன்ட் கவர்னருடன் கெஜ்ரிவால் சந்திப்பு: சட்ட அமைச்சரின் பதவி பறிபோகுமா?
டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங்கை இன்று சந்தித்து பேசினார்.
டெல்லியில் தொடர் தர்ணா போராட்டம் நடத்திய அம்மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங்கை சந்தித்து பேசினார்.

முன்னதாக டெல்லி மாநில சட்ட அமைச்சர் சோம்நாத் பாரதி 4 ஆப்பிரிக்க பெண்களை அவமதித்தது தொடர்பாக அவரை பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பாரதியை கெஜ்ரிவால் அமைச்சரவையில் இருந்து நீக்குமாறு நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ள சூழலில் தான் அவர் நஜீபை இன்று சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு குறித்து கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் எதுவும் தெரிவிக்கவில்லை. விரைவில் நஜீபுடன் நடந்த சந்திப்பில் என்ன பேசப்பட்டது, பாரதி பதவி பறிக்கப்படுமா என்பது குறித்து கெஜ்ரிவால் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே பாரதியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று பாஜக தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications