டெல்லி முதல்வராக கேஜ்ரிவால் டிச.28ல் பதவியேற்பு: 6 பேர் அமைச்சராகின்றனர்
டெல்லி: டெல்லி முதல்வராக அரவிந்த் கேஜ்ரிவால் வரும் 28ம் தேதி பதவியேற்க உள்ளார். அவருடன் 6 பேர் அமைச்சரவை உறுப்பினர்களாக பதவியேற்கின்றனர். லோக்பால் மசோதாவை வலியுறுத்தி போராட்டம் நடந்த அதே ராம்லீலா மைதானத்தில்தான் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.
ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற கோஷத்தை முன்னிலைப்படுத்தி முதன் முதலாக ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸ் கட்சியின் ஆதரவோடு டெல்லியில் ஆட்சி அமைக்க உள்ளது. ஊழலுக்கு எதிராக தொடங்கப்பட்ட ஒரு கட்சி, இந்திய தலை நகரில் ஆட்சி அமைக்க இருப்பது இந்திய அரசியலை ஒரு மாற்றுப் பாதைக்கு அழைத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆம் ஆத்மி கட்சி சார்பில் முதல்வராக போகும் 45 வயதே ஆன கெஜ்ரிவால், டெல்லியின் மிக இளம் வயது முதல்வராகப்போகிறார். இவரது தலைமையில் இடம்பெறப்போகும் அமைச்சர்கள் யார் யார் என்பது குறித்த பட்டியலை இறுதி செய்வதற்காக அக்கட்சியின் அரசியல் விவகாரக்குழு கூட்டம் செவ்வாய்கிழமையன்று நடைபெற்றது.
7 பேர் பதவியேற்பு
இதில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் சோம்நாத் பாரதி, மணீஷ் சிசோடியா, கிரிஷ் சோனி, ராக்கி பிர்லா, சவுரப் பரத்வாஜ் மற்றும் சத்யேந்திட ஜெயின் ஆகிய 7 பேர் கொண்ட அமைச்சரவையை அமைப்பது என இறுதி செய்யப்பட்டதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இளைஞர் படை
கெஜ்ரிவால் தலைமையில் அமைச்சர்களாக பதவி ஏற்க உள்ள அனைவரும் சராசரியாக 40 வயது உடையவர்களாகவே உள்ளனர். இதனால் டெல்லி மாநில சட்டமன்றம், இளைஞர்கள் நிறைந்த மன்றமாக காட்சியளிக்க போகிறது.
மணீஷ் சிசோடியா
இவர்களில் 41 வயதான மணீஷ் சிசோடியா துணை முதலமைச்சர் ஆக்கப்பட உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. மணீஷ் சிசோடியா ஒரு பத்திரிகையாளர் ஆவார். அவர், தகவல் அறியும் உரிமை போராட்டத்துக்காக தனது வேலையை ராஜினாமா செய்தவர். கெஜ்ரிவால் நடத்திய எல்லா போராட்டங்களையும் ஒருங்கிணைத்த இவர், கெஜ்ரிவாலின் நிழல் மனிதராக கருதப்படுகிறார்.
வழக்கறிஞர்
அதேபோல், 39 வயதான சோம்நாத் பாரதி உச்ச நீதிமன்ற வழக்கறிஞர். அவர் ஆம் ஆத்மி கட்சியின் சட்டப் பிரிவில் முக்கிய பங்கு வகிக்கிறார். 39 வயது வினோத்குமார், 2 தடவை கவுன்சிலராக இருந்தவர். தன் தொகுதியில் மக்கள் சபை கூட்டங்கள் நடத்தி புகழ் பெற்றவர்.
கம்யூட்டர் இஞ்ஜினியர்
34 வயது சவுரப் பரத்வாஜ் கம்ப்யூட்டர் என்ஜினீயர். லோக்பால் மசோதாவுக்கான போராட்டத்தால் கவரப்பட்ட இவர் கெஜ்ரிவாலிடம் இணைந்தார்.
இளம் அமைச்சர்
டெல்லி மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் சவுகானை தோற்கடித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியவர் ராக்கி பிர்லா. 26 வயதே ஆன இவர் தனியார் தொலைக்காட்சியில் வேலை பார்த்து வந்தார்.
அந்த வேலையை ராஜினாமா செய்து விட்டு லோக்பாலுக்காக போராட களம் இறங்கினார். வங்கியில் ரூ.2½ லட்சம் கடனுடன் இருக்கும் இவர், டெல்லி சட்டமன்றத்தின் இளம் வயது அமைச்சராக இருப்பார் என கூறப்படுகிறது.
ராம்லீலா மைதானம்
லோக்பால் மசோதாவை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்ற ராம்லீலா மைதானத்தில் நாளைய தினம் பதவியேற்பு நடைபெறும். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அரசு சார்பில் சிறப்பு அழைப்புகள், விவிஐபி பாஸ் போன்றவை தேவையில்லை என்று கேஜ்ரிவால் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications