8 கிரெடிட் கார்டுகளை பயன்படுத்திய லலித் மோடி: ஆனால் ஒன்னு கூட அவர் பெயரில் இல்லை
டெல்லி: முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடி வெளிநாட்டு வங்கிகளைச் சேர்ந்த 8 கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் ஒரு கார்டு கூட அவர் பெயரில் இல்லை.
ஐபிஎல் மோசடி புகாரில் சிக்கி நாட்டை விட்டு ஓடிய ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி லண்டன் தப்பியோடிய பிறகு அவரது இல்லத்தில் சோதனை நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகள் செல்போன் மற்றும் 8 கிரெடிட் கார்டு பயன்பாட்டு விவரங்களை கைப்பற்றினர். அவர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் ஐபிஎல் குழுவுடன் தொடர்பில் இருந்த 2008ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை அந்த கார்டுகளை எதற்காக பயன்படுத்தினார் என்ற விவரங்களை வருமான வரித்துறை கேட்டிருந்தது.

2011ம் ஆண்டு ஜூலையில் வருமான வரித்துறை மோடிக்கு அளித்த நோட்டீஸ்படி 2 கார்டுகள் அவரது உறவினர் சுரேஷ் செல்லாராமின் மனைவி கவிதா பெயரில் உள்ளது. சுரேஷ் செல்லாரம் ஒரு காலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் பெரும் பங்குகளுக்கு சொந்தக்காரராக இருந்தார். மேலும் 2 கிரெடிட் கார்டுகள் லலித் மோடியின் மாற்றான் மகள் கரிமாவின் பெயரில் உள்ளது. கரிமாவின் கணவர் கௌரவ் பர்மன் கிங்ஸ் XI பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவர்.
வருமான வரித்துறை நோட்டீஸுக்கு அவர் அளித்த பதிலில், எந்த ஒரு கிரெடிட் கார்டும் தனது பெயரில் இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் அந்த 8 கிரெடிட் கார்டுகள் யார் யார் பெயரில் உள்ளது என்ற விவரத்தை வெளியிட்டுள்ளார்.
கவிதா செல்லாராமின் பெயரில் இங்கிலாந்தைச் சேர்ந்த நேஷனல் வெஸ்ட்மின்ஸ்ட்ர வங்கி, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் சர்வீஸ் யூரோப் லிமிடெட் ஆகியவை வழங்கிய 3 கார்டுகள் உள்ளன. 2 கார்டுகள் கரிமாவின் பெயரில் உள்ளன. உறவினர்கள் ஆதித்யா செல்லாராம், அனிஷா செல்லாராம் மற்றும் விஜய் இஸ்ரானி ஆகியோர் பெயரில் தலா ஒரு கிரெடிட் கார்டுகள் உள்ளன.
அந்த கார்டுகளை பயன்படுத்தி நண்பர்களுக்கு விமான பயண டிக்கெட் எடுக்கப்பட்டது, கார்டு உரிமையாளர்களுக்கு ஹோட்டலில் அறை முன்பதிவு செய்யப்பட்டது என்று மோடி தெரிவித்துள்ளார். வேறு எந்த விவரத்தையும் அவர் வெளியிடவில்லை.
-
"தல" தோனி, ரோஹித் வரிசையில் படிதார்.. சாம்பியன்ஷிப்பை விட பெரிய சாதனை படைத்த ஆர்சிபி.. கலக்கல் -
ஆர்சிபி வெற்றிக்கு 5 காரணங்கள்.. கார்த்திக் "அண்ணன்" பங்களிப்பை மறுக்க முடியுமா? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications