கர்நாடகாவில் பாஜக நினைத்தது ஒன்று, நடப்பது இன்னொன்று!
Recommended Video

பெங்களூர்: கர்நாடகாவில், பாஜக நினைத்தது ஒன்று, நடந்தது மற்றொன்றாக இருக்கிறது.
கர்நாடக சட்டசபை தேர்தல் நாளை மறுநாள் 12ம் தேதி நடைபெற உள்ளது. மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் கடந்த செப்டம்பர் மாதம், கர்நாடகாவில் சுற்றுப் பயணம் செய்தபோது, இங்கு மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 150 தொகுதிகளை பாஜக வெல்லும் என்றார்.
அதாவது 'Mission-150' என இதற்கு பெயர் சூட்டினார். ஆனால் தேர்தலுக்கு 2 நாட்களே உள்ள நிலையில், இப்போது பாஜகவினர் வாயில் அந்த வார்த்தையே வரவில்லை.

மிஷன் 150
ஆரம்பத்தில் சமூக வலைத்தளங்களில் ஹேஷ்டேக் போட்டு பிரபலப்படுத்திய ‘Mission-150' என்ற இலக்கை இப்போது பாஜகவினர் பிரச்சாரத்தில் கூட பேசி கேட்க முடியவில்லை. ஏன் இந்த நிலை, எதற்காக அந்த பேச்சே எடுப்பதில்லை என்பது குறித்து பாஜக வட்டாரத்தில் விசாரித்தபோது, உண்மை தெரிந்தது. சமீபத்தில் வெளியான பெரும்பாலான கருத்து கணிப்புகள் கர்நாடகாவில் தொங்கு சட்டசபை அமையும் என்றே கூறுகின்றன. எனவே பாஜக அறுதி பெரும்பான்மை கூட பெற முடியாத நிலை உள்ளது.

கர்நாடகாவிலும் வேண்டாம்
எனவேதான் இப்போது வேண்டுமென்றே பாஜகவினர் இந்த ‘Mission-150' வார்த்தையை மறைக்க துவங்கிவிட்டனர் என்கிறார்கள். இதுகுறித்து பெயர் தெரிவிக்க விரும்பாமல் பேசிய பாஜக நிர்வாகி ஒருவர், 182 சட்டசபை தொகுதி கொண்ட குஜராத்தில், பாஜக 99 தொகுதிகளில் வென்றது. 50 சதவீத வாக்குகளை பெற்றது. ஆனாலும், காங்கிரஸ்தான் அங்கே சிறப்பாக செயல்பட்டதை போன்ற தோற்றம் உருவாகிவிட்டது இதற்கு முக்கிய காரணம்.

தொண்டர்கள் பாவம்
இப்போது கர்நாடகாவிலும் பெரும்பான்மை பெற்றால் கூட 150 சீட்டுகளை வெல்ல முடியாவிட்டால் பாஜ தோற்றதை போன்ற தோற்றம் உருவாகும். எனவே, ‘Mission-150'என்ற வார்த்தையை இப்போது பிரயோகிப்பதில்லை என்று தெரிவித்தார் அந்த நிர்வாகி. அதிக டார்கெட்டை நிர்ணயித்து குறைவான சீட்டுகளில் வென்றால் தொண்டர்கள் மனம் சோர்வடையும் என்பது இப்போதெல்லாம் சொல்லாததற்கு காரணம் என்கிறார் மற்றொரு நிர்வாகி.

ஜெயிச்சா மட்டும் போதும்
தேர்தல் நெருங்க நெருங்க, பெரும்பான்மைக்கே போராட்டமாக இருக்கிறது, இதில் மிஷனாவது ஒன்றாவது, ஆட்சியை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என்பது மட்டுமே இப்போது ஒரே மிஷன் என்று சிரித்தபடி நகர்ந்தார் மற்றொரு பாஜக டெல்லி பிரமுகம்.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications