700 கிலோ வெங்காயங்கள் திருட்டு... மும்பையில் "பயங்கரம்"!
மும்பை: நாளுக்கு நாள் அதிரடியாக வெங்காய விலை உயர்ந்து வரும் நிலையில், மும்பை சந்தையில் 700 கிலோ வெங்காயங்கள் திருடு போயுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் முக்கியமா, வெங்காயம் முக்கியமா என்று யாராவது கேட்டால் கண்ணை மூடிக் கொண்டு மக்கள் வெங்காயம்தான் முக்கியம் என்று டக்கென கூறுவார்கள். அப்படி ஒரு கிராக்கி வெங்காயத்திற்கு ஏற்பட்டுள்ளது.
சமீபகாலமாக டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் வெங்காயத்தின் விலை தினந்தோறும் உயர்ந்து வருகிறது. விலையைக் கேட்டால் ரத்தக் கண்ணீர் வருகிறது.

உள்நாட்டு விளைச்சல் குறைவு காரணமாக கடந்த சில வாரங்களாக வெங்காயத்தின் மொத்த கொள்முதல் மற்றும் சில்லரை விலை நிலையாக இல்லாமல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. டெல்லியில் பொதுமக்களின் நலனை கருதி வெங்காயம் மானிய விலையில் விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெங்காயத்தை பதுக்குவோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மும்பை சியான் பகுதியில் உள்ள சந்தையில் மொத்த விலைக் கடையொன்றில் சுமார் 700 கிலோ எடையுள்ள 24 வெங்காய மூட்டைகள் திருடு போயுள்ளன.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட கடையின் உரிமையாளர் ஆனந்த் நாயக், மும்பை போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், வெங்காய திருடர்களைத் தேடி வருகின்றனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெங்காய விலை கிலோவுக்கு ரூ. 80 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது. ஆசியாவிலேயே மிகப் பெரிய வெங்காய சந்தையாக கருதப்படும் மகாராஷ்டிர மாநிலம் லசால்கான் சந்தையில் வெங்காயத்தின் மொத்த கொள்முதல் விலை கிலோ ரூ.57 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications