பலாத்கார வழக்கு- 'தலைமறைவு குற்றவாளி' அசாராம் பாபுவின் மகன் கைது!!
டெல்லி: பலாத்கார வழக்கில் தேடப்பட்டு வந்த தலைமறைவு குற்றவாளியான அசாராம் பாபுவின் மகன் நாராயண்சாய் இன்று போலீசார் கைது செய்யப்பட்டுள்ளார்.
வடமாநிலங்களில் செல்வாக்கு பெற்ற சாமியார் ஆசாராம் பாபுவுக்கு பல இடங்களில் ஆசிரமங்கள் உள்ளன. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள ஆசிரமத்தில் படித்து வரும் ஒரு பள்ளி மாணவி, அண்மையில்க் அசாராம் பாபு மீது பாலியல் புகார் கூறினார். அதன்பேரில், ஆசாராம் பாபுவை ஜோத்பூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பின்னர் குஜராத் மாநிலம் அகமதாபாத் புறநகரில் உள்ள ஆசிரமத்தை சேர்ந்த பெண்ணும் புகார் தெரிவித்தார். மேலும் அப்பெண்ணின் தங்கை, அசாராம் பாபுவின் மகன் நாராயண் சாய் மீதும் பலாத்கார புகார் கொடுத்தார்.
இதைத் தொடந்து நாராயண் சாய் மீதும் குஜராத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிப்பதற்காக தேடி வந்தனர். ஆனால் தமது முன் ஜாமீன் ரத்தானதைத் தொடர்ந்து நாராயண் சாய் தப்பி ஓடி தலைமறைவானார்.
இதனால் அவரை தேடப்படும் குற்றவாளியாகவும் நீதிமன்றம் அறிவித்தது. இந்நிலையில் டெல்லி- பஞ்சாப் எல்லையில் சீக்கியர் போல் வேடமணிந்து தப்ப முயற்சித்த போது போலீசிடம் வசமாக சிக்கினார்.
இந்நிலையில்,தலைமறைவாக இருக்கும் நாராயண் சாய் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேரையும் கைது செய்ய ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்டை சூரத் நீதிமன்றம் கடந்த மாதம் 30-ம் தேதி பிறப்பித்தது.
பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு 12 நாட்கள் முடிந்த நிலையிலும் நாராயண் சாய் போலீசாரிடம் விசாரணைக்கு ஆஜராகாததால் அவரை தலைமறைவு குற்றவாளியாக நீதிமன்றம் இன்று அறிவித்தது.
இன்னும் 30 நாட்களுக்குள் போலீசார் முன்னிலையில் அவர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்.தவறினால், குற்றப்பரிவு சட்டம் 83-ன் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவருக்கு சொந்தமான சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்ய்ப்படும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications