ஆசாராம் பாபு, மகன் மீது சகோதரிகள் இருவர் பாலியல் பலாத்கார புகார்
அகமதாபாத்: மதகுருவான ஆசாராம் பாபுவும், அவரது மகன் நாராயண் சாயும் தங்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக சகோதரிகள் இருவர் புகார் அளித்தனர்.
மதகுருவான ஆசாராம் பாபு மீது 16 வயது சிறுமி பாலியல் புகார் கொடுத்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து புகார் கொடுத்த அந்த சிறுமிக்கு மனநிலை சரியில்லை என்று ஆசாராமின் மகன் நாராயண் சாய் தெரிவித்தார்.
இந்நிலையில் ஆசாராம் பாபுவும், அவரது மகனும் தங்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக சகோதரிகள் இருவர் போலீசில் புகார் அளித்துள்ளனர். ஆசாராம் மூத்த சகோதரியை அகமதாபாத்தில் உள்ள ஆசிரமத்தில் வைத்து சீரழித்துள்ளார். அவரது மகன் நாராயண் சாய் இளைய சகோதரியை 2002ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டுக்குள் இடைப்பட்ட காலத்தில் சூரத்தில் வைத்து பலாத்காரம் செய்துள்ளார்.

அவர்களின் புகாரின்பேரில் போலீசார் ஆசாராம் பாபு மற்றும் நாராயண் சாய் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். முன்னதாக நாராயண் சாய் திருமணமான பெண் ஒருவரிடம் தகாத முறையில் நடக்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்தவும் போலீசார் தீர்மானித்துள்ளனர்.
ஆசாராம் பாபு கடந்த மாதம் 2ம் தேதி முதல் ஜோத்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications