ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்: பஜ்ரங் புனியாவிற்கு தங்கம் - சரிதாவிற்கு வெள்ளி
ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா தங்கம் வென்றுள்ளார். பெண்கள் பிரிவில் சரிதா வெள்ளி வென்றுள்ளார்.
டெல்லி: ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான 65 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் பஜ்ரங் புனியா தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
பெண்களுக்கான 58 கிலோ எடைப்பிரிவில் மோதிய இந்திய வீராங்கனை சரிதா வெள்ளி வென்றுள்ளார்.
ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியாவின் முன்னணி வீராங்கனை சாக்ஷி மாலிக், சரிதா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இதில் ஆண்களுக்கான 65 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் பஜ்ரங் புனியாவும், பெண்களுக்கான 58 கிலோ எடைப்பிரிவில் சரிதாவும் இறுதிப் போட்டிக்கு நுழைந்தனர்.
தங்கம் வென்ற பஜ்ரங் புனியா
65 கிலோ எடைப்பிரிவில் இறுதிப்போட்டியில் தென்கொரியா வீரரை வீழ்த்திய இந்திய வீரர் பஜ்ரங் புனியா தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இதன் மூலம் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா வெல்லும் முதல் தங்கப்பதக்கம் ஆகும்
வெள்ளி வென்ற சரிதா
பெண்கள் 58 கி.கி., எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை சரிதா, கிர்கிஸ்தானின் டின்பேகோவாவை எதிர்கொண்டார். ஆரம்ப முதலே புள்ளிகள் பெறுவதற்கு திணறி வந்த சரிதா கடைசியில் டின்பேகோவாவிடம் 6-0 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியை தழுவினார். இதன் மூலம் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதி வரை சென்று வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications