டவுட்டா இருக்கே.. மும்தாஜை ஷாஜகான் காதலித்தாரா? தாஜ்மஹாலை இடிச்சு கோயில் கட்டனும் -பாஜக எம்எல்ஏ பரபர
கவுஹாத்தி: மத்திய அரசின் என்.சி.இ.ஆர்.டி புத்தகங்களில் முகலாயர்களின் வரலாறு குறித்த பாடங்கள் நீக்கப்பட்டது பெரும் சர்ச்சையை உண்டாக்கி இருக்கும் நிலையில் தாஜ்மஹால் மற்றும் குதுப் மினாரை இடித்துவிட்டு கோயில் கட்ட வேண்டும் என அசாம் மாநில பாஜக எம்.எல்.ஏ. ருப்ஜோதி குர்மி தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.
மத்திய கல்வித்துறையின் கீழ் செயல்படும் என்.சி.இ.ஆர்.டி வெளியிட்டு இருக்கும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வரலாற்று புத்தகங்களில் முகலாயர்களின் வரலாற்று பாடங்கள் நீக்கப்பட்டு இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில்தான் முகலாய மன்னர்களால் கட்டப்பட்ட தாஜ்மஹால் மற்றும் குதுப் மினார் போன்ற இந்திய வரலாற்று நினைவு சின்னங்களை தகர்க்க வேண்டும் என பேசி பரபரப்பை கூட்டி உள்ளார் பாஜக எம்.எல்.ஏ. ருப்ஜோதி குர்மி.
தாஜ்மஹாலை இடிக்க வேண்டும்: அசாமில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மரியானி தொகுதி எம்.எல்.ஏ பேசுகையில், "நான் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறேன். தாஜ் மஹாலையும் குதுப் மினாரையும் உடனடியாக இடித்து தரைமட்டமாக்க வேண்டும். அந்த கட்டிடங்கள் இருந்த இடத்தில் உலகின் மிக அழகான கோயில்களை கட்டி எழுப்ப வேண்டும்.
அந்த கோயில்களின் கட்டிடக் கலைக்கு அருகே வேறு எந்த நினைவு சின்னங்களும் நெருங்க முடியாத அளவிற்கு அதை கட்ட வேண்டும். 17 வது நூற்றாண்டில் வாழ்ந்த ஷாஜகான், மும்தாஜ் இறந்த பிறகு 3 முறை திருமணம் செய்துகொண்டார். உலகின் 7 அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால், இந்துக்களின் அரசு நிதியில் இருந்து எடுக்கப்பட்டது.

ஷாஜகான் மும்தாஜை காதலித்தாரா?: கடந்த 1956 ஆம் ஆண்டு முகலாயர்கள் இந்தியாவுக்குள் வருகிறார்கள். அதன் பின்னர் தாஜ்மஹால் கட்டப்படுகிறது. ஷாஜகான் இந்து மன்னர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட பணத்தை எடுத்து தாஜ்மஹாலை கட்டி உள்ளார். அது நம்முடைய பணம். தன்னுடைய 4 வது மனைவிக்காக தாஜ்மஹாலை ஷாஜகான் கட்டினார்.
அவர் மொத்தம் 7 பெண்களை திருமணம் செய்துகொண்டார். அதில் 4 வது மனைவிதான் மும்தாஜ். அவர் மும்தாஜை அதிகளவு காதலித்தார் என்றால், அவருக்கு பிறகு ஏன் 3 பெண்களை திருமணம் செய்துகொள்ள வேண்டும்? தாஜ்மஹாலை காதலின் சின்னம் என்று கூறுகிறார்கள். ஆனால், அது காதலின் அடையாளம் இல்லை." என்றார்.
-
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா!












Click it and Unblock the Notifications