ஆர்எஸ்எஸ் அமைப்பு மீது அவதூறு.. ராகுல் காந்திக்கு அசாம் நீதிமன்றம் சம்மன்
Subscribe to Oneindia Tamil
கவுகாத்தி: ஆர்எஸ்எஸ் அமைப்பை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு அசாம் மாநில கம்ரூப் கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது.
ஆர்எஸ்எஸ் தொண்டரான அஞ்சன் போரா, என்பவர் கம்ரூப் ஜுடிசியல் மேஜிஸ்திரேட் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

அசாமிலுள்ள பார்பெதா சத்ரா கோயிலுக்குள் தன்னை நுழைய ஆர்எஸ்எஸ் அமைப்பு அனுமதிக்கவில்லை என்று ராகுல் காந்தி கடந்த ஆண்டு டிசம்பரில் கூறியிருந்தது தொடர்பாக இவ்வழக்கு தொடரப்பட்டது.
பொய்யான குற்றச்சாட்டு கூறி, ஆர்எஸ்எஸ் பெயரை கெடுக்க ராகுல் காந்தி இதுபோல செயல்பட்டதாக மனுதாரர் கூறியிருந்தார். இதையடுத்து வரும் செப்டம்பர் 29ம் தேதி கோர்ட்டில் ஆஜராக நீதிமன்றம் இன்று ராகுல் காந்திக்கு உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications