Assam: 'செஞ்சுரி' சொல்லியடிக்கும் ஹிமந்தா பிஸ்வா சர்மா.. கணிப்பு பலித்தது; NDA 100 இடங்களை நெருங்குகிறது
அசாம் சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான வாக்கு எண்ணிக்கை எதிர்பார்க்கப்பட்டதை காட்டிலும் அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) 100 இடங்களை நெருங்கி வருகிறது.
தற்போதைய அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் கணிப்பை வாக்கு எண்ணிக்கை விபரங்களும் உறுதிப்படுத்துகிறது. தேர்தலுக்கு முன்பே ஹிமாந்தா "NDA கூட்டணி 90 முதல் 100 இடங்களை வெல்லும்" என்று துல்லியமாகக் கூறியிருந்தார். இப்போது அந்தக் கணிப்பு உண்மையாகும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

ஹிமந்தாவின் துல்லியமான கணிப்பு பலித்தது
தேர்தலுக்கு முன்பு பல முறை பத்திரிகையாளர்களிடம் பேசிய ஹிமந்தா பிஸ்வா சர்மா, "நாங்கள் 90 முதல் 100 இடங்களை வெல்வோம். காங்கிரஸ் 16-17 இடங்கள், AIUDF 5-6 இடங்கள், ரைஜோர் தளம் 1 இடம் மட்டுமே பெறும்" என்று தெளிவாகக் கூறியிருந்தார்.
அவர் குறிப்பிட்ட சில தொகுதிகளான திஹு, நல்பாரி ஆகியவற்றில் NDA பெரும் வித்தியாசத்தில் வெல்லும் என்றும், சிவசாகர் தொகுதியில் கடைசியில் NDA வெற்றி பெறும் என்றும் துல்லியமாகச் சொன்னார். தற்போது வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பப் போக்கு அவரது இந்தக் கணிப்பை உறுதிப்படுத்துகிறது.
ஜலுக்பாரி தொகுதி
அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா போட்டியிடும் ஜலுக்பாரி தொகுதியில் அவர் பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். 2001 முதல் இந்தத் தொகுதி அவரை தொடர்ந்து வெற்றியை கொடுத்து அவரை அசாம் சட்டமன்றத்துக்கு அனுப்பி வருகிறது.
இந்த முறையும் அவர் காங்கிரஸ் வேட்பாளர் பிதிஷா நியோக் மற்றும் சுயேச்சை வேட்பாளர் தீபிகா தாஸ் ஆகியோரை பெரும் வித்தியாசத்தில் முன்னிலையில் வெல்லப்போகிறார்.
கட்சி வாரியாக ஆரம்ப முன்னிலை நிலவரம்
தேர்தல் ஆணையத்தின் தரவுகள் படி, பாரதிய ஜனதா கட்சி (BJP) 77 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இந்திய தேசிய காங்கிரஸ் (INC) 25 தொகுதிகளிலும், போடோலாந்த் பீப்பிள்ஸ் ஃபிரண்ட் (BOPF) மற்றும் அசம் கணா பரிஷத் (AGP) தலா 10 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. AIUDF 2 தொகுதிகளிலும், UPPL, ரைஜோர் தளம் (RJRD) தலா ஒரு தொகுதியிலும் முன்னிலை வகிக்கின்றன. மொத்தம் 126 தொகுதிகளின் ஆரம்ப நிலவரம் NDA கூட்டணிக்கு மிகவும் சாதகமாக உள்ளது.
EVM வாக்குகள் முழுமையாக எண்ணப்படும் வரை இறுதி முடிவுகள் உறுதியாகக் கூற முடியாது. ஆனால் தற்போதைய போக்கு NDA கூட்டணிக்கு வலுவான வெற்றியை உறுதிப்படுத்துவதாகத் தெரிகிறது.
ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் துல்லியமான கணிப்பு மற்றும் அவரது தொகுதியில் உள்ள பெரும் முன்னிலை ஆகியவை அசாம் அரசியலில் அவரது செல்வாக்கை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளன. முழு முடிவுகள் வெளியான பிறகே அசாம் அரசியல் எதிர்காலம் தெளிவாகும்.
-
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
தலைக்கு மேல் தொங்கும் கத்தி.. தவெகவுக்கு தாவிய அதிமுக மாஜி எம்.எல்.ஏ.க்கள்! சுப்ரீம் கோர்ட்டில் கேஸ் -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்! -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
2 அமைச்சர் பதவிக்காக.. திமுகவை கழற்றிவிட்டது நியாயமா? ராகுலுக்கு சிபிஎம் அடுக்கடுக்காக கேள்வி! -
ராஜ்யசபாவுக்கு செல்லும் ராகுலின் ‘டேட்டா கிங்’.. பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி தேர்வு! -
வெட்கமாக இல்லையா விஜய் அரசே? ஆன்லைன் பத்திரப்பதிவு சேவை குறித்து திமுக விளக்கம் -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
காங்கிரஸின் அணுகுமுறை இப்படித்தான் இருக்கும் என்றால்.. இந்தியா கூட்டணியை அதிர வைத்த ஜான் பிரிட்டோ எம்பி











Click it and Unblock the Notifications