பீப்பிஸ் பல்ஸ் அசாம் எக்சிட் போல் முடிவுகள்: போராட்டத்துடன் பிஜேபி-க்கு 3வது ஆட்சி!

Subscribe to Oneindia Tamil

அசாம் மாநில சட்டமன்றத் தேர்தல் 2026 ஒரே கட்டமாக ஏப்ரல் 9 அன்று நடைபெற்று முடிந்த நிலையில், 5 மாநில சட்டமன்ற தேர்தலில் மேற்கு வங்காளத்தில் கடைசியாக 2ஆம் கட்ட வாக்குபதிவு முடிந்த நிலையில், இன்று மாலை எக்சிட் போல் வெளியாகியுள்ளது.

இதில் முக்கியமாக பிஜேபி-யின் கோட்டையாக இருக்கும் அசாம் மாநிலத்தின் 126 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் இந்தத் தேர்தலில் மொத்தம் 85.70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இது அசாம் வரலாற்றில் மிக உயர்ந்த வாக்கு சதவீதமாக பதிவாகியுள்ளது. இந்த அதிக வாக்கு பதிவு மாநில அரசியலை பெரிதும் பாதிக்கும் என்று அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

assam exit poll Peoples Pulse assam election prediction Peoples Pulse assam seat prediction bjp vs congress assam exit poll assam vote share

இந்தத் தேர்தலில் 2.4 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் பங்கேற்றுள்ளனர். அசாம் சட்டமன்றத்தில் மொத்தம் 126 இடங்கள் உள்ளன. பெரும்பான்மை பெற 64 இடங்கள் தேவை. தற்போது ஆளும் கட்சியான பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்க முயற்சி செய்கிறது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் நோக்கத்தில் களத்தில் உள்ளது.

இந்த நிலையில் அசாம் சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகியுள்ளன. பீப்புள்ஸ் பல்ஸ் (Peoples Pulse) நிறுவனம் வெளியிட்டுள்ள இந்தக் கணிப்புகளில், தற்போது ஆளும் பாஜக தலைமையிலான NDA கூட்டணிக்கு சாதகமான சூழ்நிலையை காட்டுகின்றன.

ஹிமான்தா முன்னிலை

முதலமைச்சர் பதவிக்கான விருப்பம் குறித்த எக்ஸிட் போல் கணிப்பில் ல் தற்போதைய முதலமைச்சர் ஹிமான்தா பிஸ்வா சர்மா 45% ஆதரவுடன் முன்னிலை வகிக்கிறார். காங்கிரஸ் வேட்பாளர் கௌரவ் கோகாய் 35% ஆதரவைப் பெற்றுள்ளார். 20% பேர் "யாரும் இல்லை / மற்றவர்கள்" என்று தெரிவித்துள்ளனர்.

பாஜகவுக்கு பெரும்பான்மை ஆனா..

இந்த சட்டமான்ற தேர்தலில்
பாஜக: 68-72 இடங்கள்
காங்கிரஸ் (INC): 22-26 இடங்கள்
அசோம் கன பரிஷத் (AGP): 7-10 இடங்கள்
போடோ பீப்புள்ஸ் ஃப்ரண்ட் (BPF): 8-9 இடங்கள்
AIUDF: 3-5 இடங்கள்
ரைஜோர் தளம்: 1-2 இடங்கள்
மற்ற கட்சிகள் (UPPL, AJP, CPI(M) உள்ளிட்டவை): 0-1 இடங்கள் பெறும் என கணிக்கப்பட்டு உள்ளது.

பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்கும் என கூறப்பட்டாலும், 126 உறுப்பினர்களைக் கொண்ட அசாம் சட்டமன்றத்தில் பெரும்பான்மைக்கு 64 இடங்கள் தேவை. இதனால் பாஜக தனித்து அல்லது கூட்டணியுடன் தான் ஆட்சியைத் தக்கவைக்கும் வாய்ப்பு உள்ளதாக இந்தக் கணிப்பு காட்டுகிறது.

வாக்கு சதவீதம்

இந்த சட்டமான்ற தேர்தலில் எந்த கட்சிகள் எவ்வளவு வாக்குளை பெறும் என்பதையும் பீப்புள்ஸ் பல்ஸ் கணித்துள்ளது.
பாஜக: 38.6%
காங்கிரஸ்: 36.5%
AGP: 7.0%
BPF: 5.5%
AIUDF: 2.8%
ரைஜோர் தளம்: 1.1%
UPPL: 1.0%
AJP: 0.8%
CPI(M): 0.5%
மற்றவர்கள் / சுயேட்சைகள்: 6.2%

இந்த எக்ஸிட் போல் கணிப்பில் +/- 3% பிழை வாய்ப்பு உள்ளது என்று பீப்புள்ஸ் பல்ஸ் தெரிவித்துள்ளது. இறுதி முடிவுகள் மே 4 அன்று அறிவிக்கப்பட உள்ளன. இந்த எக்ஸிட் போல் முடிவுகள் அசாம் அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. ஹிமான்தா பிஸ்வா சர்மாவின் தலைமையில் பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்குமா என்பதை மே 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் உறுதிப்படுத்தும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+