சூனியக்காரி என சந்தேகம்... 63 வயது பெண்ணின் தலையைத் துண்டித்துக் கொன்ற கிராம மக்கள்
கவுகாத்தி: அசாமில் சூனியக்காரி எனச் சந்தேகித்து 63 வயது பெண்ணின் தலையைத் துண்டித்து கிராம மக்கள் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலம் சோனிட்பூர் மாவட்டம் விமாஜூலி கிராமத்தைச் சேர்ந்தவர் மோனி ஓராங்(60). இவர் பில்லி, சூனியம், செய்வினை உள்ளிட்ட மாந்திரிக வேலைகளைச் செய்து வந்ததாக, கிராம மக்கள் இடையே தகவல் பரவியது.
அதனைத் தொடர்ந்து, நேற்று நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று சேர்ந்து மோனியின் வீட்டை முற்றுகையிட்டனர். பின்னர் வீடு புகுந்து மோனியை வெளியே இழுத்து வந்த மக்கள், அவரை அடித்து உதைத்தனர்.
அப்போது கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் மோனியின் கழுத்தை வெட்டியுள்ளான். இதில் சம்பவ இடத்திலேயே மோனி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பாக தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆனால், அவரை ஊரின் உள்ளே நுழைய கிராம மக்கள் அனுமதிக்கவில்லை. பின்னர் கூடுதல் போலீஸ் படை துணையுடன் கூட்டத்தை அடித்து, விரட்டிய போலீசார் மோனியின் பிரேதத்தை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக இதுவரை மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் பலரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மோனி பில்லி சூனிய வேலைகள் செய்வதாக அதே ஊரைச் சேர்ந்த பூசாரி ஒருவரின் தூண்டுதலாலேயே கிராம மக்கள் இந்தக் கொலையைச் செய்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சோனிட்பூர் மாவட்ட மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications