Assam Lok Sabha Election Results Live : அசாமில் 9 தொகுதிகளை வென்ற பாஜக.. காங்கிரஸ் 3ல் வெற்றி
திஸ்பூர் : அசாம் மாநிலத்தில் உள்ள 14 லோக்சபா தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ள நிலையில், பாஜக 8 தொகுதிகளிலும், காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் வென்றுள்ளன.
அசாம் மாநிலத்தில் 14 லோக்சபா தொகுதிகள் உள்ளது. இங்கு ஏப்ரல் 19ஆம் தேதி 5 தொகுதிகளிலும், ஏப்ரல் 26ல் 5 தொகுதிகளிலும் மே 7ஆம் தேதி மீதமிருக்கும் 4 தொகுதிகளிலும் லோக்சபா தேர்தல் நடைபெற்றது. கடந்த 2019 லோக்சபா தேர்தலில் அசாம் மாநிலத்தில் பாஜக 9 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 3 இடங்களையும் கைப்பற்றியது.
அதேபோல் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக கட்சி ஒரு இடத்திலும் வென்றது. இம்முறை களம் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது.தபால் வாக்கு எண்ணிக்கையின் போது பாஜக மற்றும் காங்கிரஸ் இரு கட்சியினருக்கும் கடுமையான போட்டி ஏற்பட்டது.

தற்போது 10.30 மணி நிலவரப்படி பாஜக 8 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 4 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது. அதேபோல் மற்ற கட்சிகள் 2 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன. தற்போது 12.30 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 10 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 4 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.
இறுதியாக அசாம் மாநிலத்தில் உள்ள 14 தொகுதிகளில் பாஜக 9 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 3 தொகுதிகளிலும் வெற்றிப் பெற்றுள்ளது. அதேபோல் யுபிபிஎல் கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றிபெற்றுள்ளன. மொத்தமாக பாஜக 37.43 சதவிகித வாக்குகளை பெற்ற நிலையில், காங்கிரஸ் கட்சி 37.48 சதவிகித வாக்குகளை கைப்பற்றியுள்ளது.












Click it and Unblock the Notifications