"இப்போது தான் ஆட்டத்தையே ஆரம்பித்துள்ளோம்.." பாஜகவுக்கு நேரடியாக சவால் விட்ட கரப்பான் பூச்சி கட்சி

Subscribe to Oneindia Tamil

கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் நேற்றைய தினம் கரப்பான் பூச்சி கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெறவிருந்த நிலையில், திடீரென அதன் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். மாலை தான் அவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில், தங்களது தடுப்புக்காவல் சட்டவிரோதமானது என்று அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் ஆசுதோஷ் ரங்கா கூறியுள்ளார். மேலும், அசாமில் கரப்பான் பூச்சி கட்சியின் செயல்பாடுகள் மேலும் தீவிரமடையும் என்றும் தெரிவித்துள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை கவுகாத்தியில் எதிர்க்கட்சியான அசாம் ஜாதிய பரிஷத் தலைவர் குன்கி சவுத்ரியின் இல்லத்தில் கரப்பான் பூச்சி கட்சியின் தன்னார்வலர்கள் கூட்டம் நடைபெற இருந்தது. இதற்காக அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது. இருப்பினும் கூட்டம் தொடங்குவதற்கு சற்று நேரத்திற்கு முன்பு, நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.

Assam Police Cockroach Janata Party

தடுப்பு காவல்

ரங்கா உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களை போலீசார் தடுப்பு காவலில் வைத்தனர். கஹிலிபாரா பகுதியில் உள்ள 10வது அசாம் போலீஸ் பட்டாலியன் தலைமையகத்துக்கு அழைத்து சென்றதாக தகவல்கள் வெளியாகின. தடுப்புக்காவலுக்கான காரணம் குறித்து போலீசார் தெளிவான விளக்கம் அளிக்கவில்லை என கரப்பான் கட்சி தரப்பில் கூறப்பட்டது.

நாள் முழுக்க தடுப்பு காவலில் வைக்கப்பட்ட ரங்கா மாலையில் தான் விடுவிக்கப்பட்டுள்ளார். அசாம் போலீஸாரின் சட்டவிரோத தடுப்புக்காவல் முடிவுக்கு வந்துவிட்டது என்று தனது ஆசுதோஷ் ரங்கா இது தொடர்பாக பதிவிட்டிருந்தார். தங்களை எங்கிருந்து போலீசார் அழைத்து சென்றார்களோ, அங்கேயே மீண்டும் கொண்டு வந்து விடுமாறு கேட்டுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இப்போது தான் தொடங்கியுள்ளோம்

முதல்வர் ஹிமந்தா பிஸ்வ சர்மாவை நேரடியாக குறிப்பிட்டு மற்றொரு பதிவையும் வெளியிட்ட ரங்கா, "அசாமின் கரப்பான் பூச்சிகள் இப்போதுதான் தொடங்கியுள்ளன!" என சவால் விடுக்கும் வகையில் போஸ்ட் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

மேலும் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "என்னையும் எனது டீமையும் போலீசார் எந்த சட்டத்தின் அடிப்படையில் தடுப்பு காவலில் வைத்தீர்கள் என கேட்டோம்.. தங்களுக்கு தெரியாது என்றும் மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்ததாக போலீசார் கூறினர். அசாமில் அரசு பள்ளிகளின் நிலையை மேம்படுத்துவது, காசிரங்காவில் பழங்குடியின மக்களின் உரிமைகளை பாதுகாப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கவே நாங்கள் திட்டமிட்டிருந்தோம். அதை முடக்க பார்க்கிறார்கள்.

எல்லைகள்

வரும் தேர்தலை மனதில் வைத்து ஆளும் தரப்புக்கு சாதகமாக தொகுதி எல்லைகள் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. முதல்வர் ஹிமந்தா பிஸ்வ சர்மா கரப்பான் பூச்சிகளை பார்த்து பயப்படுகிறார். போலீசாரை பயன்படுத்தி எங்களை அச்சுறுத்தியுள்ளார். ஆனால் நாங்கள் பயப்படவில்லை. எங்கள் குழந்தைகளுக்கு நல்ல பள்ளிகளும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளும் வேண்டும்" என்று ரங்கா தெரிவித்துள்ளார்.

மேலும், டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தின்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா செய்ததாக அவர் கூறும் அதே தவறை ஹிமந்தா பிஸ்வ சர்மாவும் செய்துள்ளதாக ரங்கா விமர்சித்தார். கரப்பான் பூச்சி கட்சியின் செயல்பாடுகள் வடகிழக்கு மாநிலங்கள் முழுவதும் தீவிரமடையும் என்றும் அவர் கூறினார்.

போராட்டம்

ஏற்கனவே, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்பதை கண்டித்து நாடு முழுக்க போராட்டத்தை கரப்பான் பூச்சி கட்சி அறிவித்திருந்தது. வரும் அக்டோபர் 2ம் தேதி தொடங்கி நாடு முழுக்க தொடர் போராட்டத்தை நடத்த போவதாக கரப்பான் பூச்சி கட்சி அறிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+