மோடிஜி.. "விழுந்ததோட சரி".. கஷ்டப்படுறோம்.. ஆக்ஷன் எடுங்க.. அஸ்ஸாம் சகோதரர்கள் சுவாரஸ்ய கடிதம்

Subscribe to Oneindia Tamil

குவாஹாத்தி: பல் வளரவில்லை என்பதால் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அஸ்ஸாமை சேர்ந்த இரு சிறுவர்கள் பிரதமருக்கும் அந்த மாநில முதல்வருக்கும் ஹிமாந்தா சர்மாவுக்கும் கடிதம் எழுதியுள்ளது சிரிப்பு கலந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக பிரதமர், முதல்வர், ஆட்சியாளர்களுக்கு சிறுவர்கள் கடிதம் எழுதுகிறார்கள் என்றால் அது பெரிய விஷயமாகவே பேசப்படும். அதிலும் அவர்கள் சமூகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து எழுதினால் அவை வைரலாகிவிடும்.

தற்போது குழந்தைகள் தங்கள் அழகான கையெழுத்துகளால் பென்சிலை கொண்டு 4 வரிகள் கொண்ட பேப்பரில் எழுதி அவற்றை சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வருகிறார்கள்.

பள்ளியில் ஏற்றத் தாழ்வுகள்

பள்ளியில் ஏற்றத் தாழ்வுகள்

இந்த கடிதங்களில் பொதுவாக சாலை சரியில்லை, பள்ளியில் ஏற்றத் தாழ்வுகள், ஜாதி சான்றிதழ் கிடைக்கவில்லை என்பன போன்ற கோரிக்கைகள்தான் அதிகமாக இருக்கும். தற்போது கொரோனா காலத்தில் பள்ளிகளை விரைவில் திறக்க வேண்டும், ஆன்லைன் வகுப்புகள் புரியவில்லை என்பது போன்ற கோரிக்கைகள்தான் இருக்கும்.

பள்ளித் திறப்பு

பள்ளித் திறப்பு

அண்மையில் கூட மாணவி ஒருவர் பள்ளிகளை விரைந்து திறக்குமாறும் தங்களுக்கு மனஉளைச்சல் ஏற்படுவதாகவும் நீதிமன்றத்திற்கு கடிதம் எழுதியிருந்தார். அது போல் கருணாநிதி உடல்நிலை சரியில்லாத போது அவர் உடல்நலம் குணமடைய வேண்டும் என சிறுவன் ஒருவர் கடிதம் எழுதியிருந்தார்.

Recommended Video

    Trump நிர்வாகத்தில் இருந்தது இப்போது இல்லை.. PM Modi-ன் பயணத்தில் முன்னுரிமை கொடுக்காத US Media?
    அஸ்ஸாமில் இரு சகோதரர்கள்

    அஸ்ஸாமில் இரு சகோதரர்கள்

    அந்த வகையில் அஸ்ஸாமில் இரு சகோதரர்களும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் அஸ்ஸாம் முதல்வர் ஹிமாந்த் சர்மாவுக்கும் கடிதம் எழுதியிருந்தனர். கடந்த 25 ஆம் தேதி 4 வரிகள் கொண்ட ஒரு பேப்பரில் அவர்கள் கடிதம் எழுதியுள்ளனர். அவர்கள் பெயர் ரிஸ்வான் (6) மற்றும் ஆர்யான் (5). இவர்களுக்கு முன்பக்கமாக இருந்த இரு பால் பற்கள் விழுந்து இதுவரை முளைக்கவில்லை.

    சிக்கல்

    சிக்கல்

    இவர்களால் ருசிகரமான உணவை உட்கொள்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கு என்ன செய்யலாம் என யோசித்த சிறுவர்கள் உடனடியாக பிரதமருக்கும் முதல்வருக்கும் கடிதம் எழுதியுள்ளார்கள். அதில் ரிஸ்வான் முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் அன்புள்ள ஹிமந்தா அங்கிள், எனக்கு 5 பற்கள் வளரவில்லை. இதனால் எனக்கு பிடித்தமான உணவுகளை உட்கொள்வதில் சிரமங்கள் உள்ளன. தயவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எழுதியுள்ளார்.

    அன்புள்ள மோடிஜி

    அன்புள்ள மோடிஜி

    இவரது தம்பி ஆர்யான் பிரதமர் நரேந்திர மோடிக்கே ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அன்புள்ள மோடிஜி, எனக்கு மூன்று பற்கள் வளரவில்லை. இந்த பற்கள் வளராததால் பிடித்த உணவுகளை மெல்ல முடியவில்லை. இதனால் அன்புள்ள மோடிஜி தயவு செய்து இதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

    சமூகவலைதளங்கள்

    சமூகவலைதளங்கள்

    இந்த கடிதங்களை சிறுவர்களது மாமா சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த கடிதத்தை படிக்கும் நெட்டிசன்கள் படித்துவிட்டு சிரிப்பை அடக்க முடியாமல் இருக்கிறார்கள். அந்த பதிவில் நெட்டிசன் ஒருவர் பெட்ரோல் டீசல் விலை உயர்வு, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றில் கவனம் செலுத்தவில்லை என்றாலும்கூட பரவாயில்லை. தயவு செய்து இந்த சிறுவர்களின் கோரிக்கையையாவது பிரதமர் நிறைவேற்ற முன் வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+