அசாம் கலவரத்தை தடுப்பதில் மோடி அரசு தோல்வி: முதல்வர் தருன் கோகாய் குற்றச்சாட்டு
Subscribe to Oneindia Tamil
குவகாத்தி: அசாமில் நடைபெறும் கலவரங்களை தடுப்பதில் மோடி தலைமையிலான மத்திய அரசு தோல்வியடைந்துவிட்டதாக அம்மாநில முதல்வர் தருன் கோகாய் குற்றம் சாட்டினார்.

- அண்டை மாநிலமான நாகாலாந்தில் இருந்து வந்து அசாம் எல்லையிலுள்ள கோலகாட் மாவட்டத்திலுள்ள மக்களை சிலர் தாக்கிவருவதாகவும், இதில் 9 பேர் உயிரிழந்ததாகவும், 10 ஆயிரம் பேர் வீடிழந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
- அசாம் மாநில அரசு தங்களை காக்க தவறிவிட்டதாக கூறி கோலகாட் மாவட்ட மக்கள் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். காயமடைந்தவர்களை பார்க்க சென்ற அசாம் முதல்வர் தருன்கோகாய் பாதுகாப்பு வாகனங்கள் மீது கலவரக்காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியிருந்தனர்.
- இந்நிலையில் ரங்கஜான் பகுதியில் அசாம் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் ரப்பர் குண்டுகளை வைத்து துப்பாக்கி சூடு நடத்தினர். துப்பாக்கி சூடு மற்றும் போலீசாரின் தடியடியால் 18 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- இதனிடையே அசாம் மற்றும் நாகாலாந்து மக்கள் நடுவேயான மோதலை தடுப்பதில் மத்திய அரசு தோல்வியடைந்துவிட்டதாக அசாம் முதல்வர் தருன் கோகாய் குற்றம்சாட்டியுள்ளார். இதுவரை மத்திய அரசு சார்பில் ஒரு அதிகாரி கூட அசாமுக்கு அனுப்பப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
- இந்த குற்றச்சாட்டை உள்துறை இணை அமைச்சர் கிரன் ரிஜிஜு மறுத்துள்ளார். ஆயிரம் துணை ராணுவ வீரர்கள், அசாம்-நாகாலாந்து எல்லைக்கு பாதுகாப்பு பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். படைகளை அனுப்புவது மத்திய அரசின் வேலையென்றும், அவற்றை முறையாக பயன்படுத்துவது மாநில அரசின் கையில்தான் உள்ளது என்றும் கிரன் ரிஜிஜு தெரிவித்தார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications