வருஷத்துக்கு ஒரு கட்சி.. எந்த சிஎம் எப்போ அவுட்? கணிக்க முடியாத 'கொத்து பரோட்டா’ ஹரியானா அரசியல்!

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: இந்திய மாநிலங்களிலேயே இப்படி ஒரு குழப்பமான அரசியலை எங்கேயுமே பார்த்துவிட முடியாது.. நேற்றிருந்த கட்சி நாளை இருக்காது.. இன்று முதல்வராக இருப்பவர் நாளை தொடருவார் என சொல்லவும் முடியாது என்பதுதான் ஹரியானா மாநிலத்தில் அரசியல், தேர்தல் சரித்திரம் பூகோளம் எல்லாமும்.. ஆம் அப்படி ஒரு கொத்து பரோட்டா அரசியல் வரலாற்றைக் கொண்ட ஹரியானாவின் தேர்தல் ஹிஸ்டரி இது!

பஞ்சாப்பில் இருந்து பிரித்து 1966-ல் ஹரியானா மாநிலம் உருவாக்கப்பட்டது. இந்த மாநிலத்தில் முதலாவது முதல்வராக இருந்தவர் காங்கிரஸ் கட்சியின் பிடி சர்மா. 1967-ம் ஆண்டுதான் ஹரியானா மாநிலத்துக்கான முதல் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. அப்போது ஹரியானாவில் மொத்தம் 81 சட்டசபை தொகுதிகள் இருந்தன. பெரும்பான்மைக்கு தேவை 41 இடங்கள். அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 48 இடங்களையும் பாஜகவின் தாய் அமைப்பான ஜன சங்கம் 12 இடங்களையும் கைப்பற்றியது.

haryana assembly election 2024 congress 2024

1967 சட்டசபை தேர்தல்: ஆனால் 1967 சட்டசபை தேர்தல் முடிந்த உடனேயே காங்கிரஸ் கட்சி மிகப் பெரும் பிளவை சந்திதத்து, அக்கட்சியின் மூத்த தலைவரான பீரேந்திர சிங், பெரும்பான்மை காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுடன் விஷால் ஹரியானா கட்சியைத் தொடங்கி முதல்வரானார். ஆனால் மொத்தமே 241 நாட்கள்தான் விஷால் ஹரியானா கட்சி ஆட்சியில் இருந்தது. மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசு ஹரியானா அரசை டிஸ்மிஸ் செய்து ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியது.

haryana assembly election 2024 congress 2024

ஆளும் கட்சிக்கு தர்ம அடி: இதனால் 1968-ம் ஆண்டு மீண்டும் ஹரியானா மாநிலம் சட்டசபை தேர்தலை எதிர்கொண்டது. 241 நாட்கள் ஆட்சியில் இருந்த விஷால் ஹரியானா கட்சிக்கு கிடைத்தது வெறும் 16 இடங்கள்தான். காங்கிரஸ் 48 இடங்களைக் கைப்பற்றியது.அந்த தேர்தலில் பாஜகவின் தாய் அமைப்பான ஜன சங்கம் 7 இடங்களில் வென்றது. மீண்டும் காங்கிரஸ் அரியணை ஏறியது. காங்கிரஸ் கட்சியின் முதல்வரான பன்சிலால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1972 சட்டசபை தேர்தல்: 1972-ம் ஆண்டு ஹரியானா சட்டசபை 3-வது தேர்தலை எதிர்கொண்டது. அப்போது காங்கிரஸ் இந்திரா காங்கிரஸ், ஸ்தாபன காங்கிரஸ் என பிளவுபட்டது. ஹரியானாவில் இந்திரா காங்கிரஸ் 48, ஸ்தாபன காங்கிரஸ் 12 இடங்களில் வென்றன. முதலாவது தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த விஷால் ஹரியானா கட்சிக்கு 3, பாஜகவின் தாய் அமைப்பான ஜனசங்கத்துக்கு 2 இடங்கள்தான் கிடைத்தன. பன்சிலாதைத் தொஅர்ந்து பன்சாரி தாஸ் குப்தா முதல்வராக இருந்தார். இதன் பின் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

ஆட்சியை பிடித்த ஜனதா: 1977-ம் ஆண்டில் இருந்து ஹரியானாவில் அரசியல் சரித்திரமே வேறாக தொடங்கிவிட்டது. 1977-ம் ஆண்டு ஹரியானா சட்டசபை தேர்தலின் போது தொகுதிகள் எண்ணிக்கை 90 ஆக அதிகரிக்கப்பட்டது. இந்த தேர்தலில் தேவிலால் தலைமையிலான ஜனதா கட்சி முதல் முறையாக தேர்தலை சந்தித்து 75 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. ஆட்சியில் இருந்த காங்கிரஸை மண்ணோடு மண்ணாக குழி தோண்டிப் புதைத்தனர் ஹரியானா வாக்காளர்கள். ஆம் அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 3 இடங்கள்தான் கிடைத்தன. மரணப்படுகையில் இருந்த விஷால் ஹரியானா கட்சி கூட 5 தொகுதிகளைக் கைப்பற்றியது. ஆனாலும் தேவிலால் ஆட்சி 2 ஆண்டுகள்தான் நீடித்தது.

haryana assembly election 2024 congress 2024

உடைந்தது ஜனதா கட்சி: 1979-ம் ஆண்டின் இறுதியில் ஜனதா கட்சியில் ப்ஜன்லால் தலைமையில் பெரும் பிளவு ஏற்பட பெரும்பாலான ஜனதா கட்சி எம்.எல்.ஏக்கள் காங்கிரஸுக்கு தாவினர். இதனால் பஜன்லால் தலைமையில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. புதை குழியில் இருந்த காங்கிரஸ் மீண்டும் உயிர் பெற்றது.

மீண்டெழுந்த காங்கிரஸ்: 1982-ம் ஆண்டு ஹரியானா சட்டசபை தேர்தல் விசித்திரமான களமாக மாறியது. இந்த தேர்தலில் மரணப் படுக்கையில் இருந்து மீண்ட காங்கிரஸ் கட்சி 36 இடங்களிலும் தேவிலால் புதியதாக தொடங்கிய இந்திய தேசிய லோக் தளம் கட்சி 31 இடங்களிலும் வென்றன. இந்த தேர்தலில்தான் முதல் முறையாக பாஜக 6 இடங்களைக் கைப்பற்றியது. 16 சுயேட்சைகளும் வென்றிருந்தனர். இவர்கள் ஆதரவுடன் காங்கிரஸ் தொடர்ந்து ஆட்சியில் நீடித்தது.

தேவிலால் குடும்பத்தால் குழப்பமோ குழப்பம் : 1987-ம் ஆண்டு தேர்தலில் என்ன நடந்தது தெரியுமா? 1982-ல் 36 இடங்களை வென்ற காங்கிரஸுக்கு 5 இடங்களும் 31 இடங்களை வென்ற லோக் தள் கட்சிக்கு 60 இடங்களும் கிடைத்தது. இந்த தேர்தலில் பாஜக 16 இடங்களைக் கைப்பற்றியது. இதனால் காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் முடிவுரை எழுதி வைத்தனர் ஹரியானா வாக்காளர்கள். இந்த கால கட்டத்தில் தேவிலால் மகன் ஓம் பிரகாஷ் சவுதாலாவும் ஹரியானா முதல்வராக்கப்பட்டார் 1987-ம் ஆண்டில் இருந்து 1991-ம் ஆண்டு வரை ஹரியானாவில் யார் யாரெலாம் முதல்வர்களாக இருந்தனர் தெரியுமா? தேவிலால், சவுதாலா, பன்சாரி தாஸ் குப்தா, மீண்டும் சவுதாலா, ஹுக்கம் சிங் (15 நாட்கள்). இதனையடுத்து 78 நாட்கள் ஜனாதிபதி ஆட்சியும் அமலில் இருந்தது.

haryana assembly election 2024 congress 2024

உயிர் பெற்ற காங்கிரஸ்: 1991- ம் ஆண்டு ஹரியானா தேர்தலில்தான் 5 ஆண்டுகள் நீடித்த முதலாவது ஆட்சியே அமைந்தது. 1991 தேர்தலில் காங்கிரஸ் 51 இடங்களில் வென்றது. ஜனதா கட்சிக்கு 16, ஹரியானா விகாஷ் கட்சி 12, ஜனதா தள் 3, பாஜக 2, பகுஜன் சமாஜ் 1 என வென்றன. அப்போது காங்கிரஸின் முதுபெரும் தலைவர் பஜன்லால் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆட்சியில் நீடித்தார்.

காணாமல் போன காங்கிரஸ்: 1996-ம் ஆண்டு ஹரியானா தேர்தலில் தலைகீழாக தேர்தல் முடிவுகள் மாறிப்போயின. இரண்டாக உடைந்த காங்கிரஸ் கட்சியில் இந்திரா காங்கிரஸ் கட்சி 9, திவாரி காங்கிரஸ் 3 இடங்களைப் பெற்றன. பன்சிலாலின் ஹரியானா விகாஷ் கட்சி 33, சமதா கட்சி 24, பாஜக 11, சுயேட்சைகள் 10இடங்களைப் பெற்றன. பன்சிலால் மீண்டும் கூட்டணி ஆட்சியின் முதல்வரானாலும் 3 ஆண்டுகள்தான் நீடித்தார். 4 ஆண்டுகளிலேயே ஹரியானா மாநிலம் இன்னொரு சட்டசபை தேர்தலை சந்தித்தது.

சவுதாலா விஸ்வரூபம்: 2000-ம் ஆண்டு தேர்தலில் இந்திய தேசிய லோக் தள் கட்சியை சவுதாலா உருவாக்கி 47 இடங்களைக் கைப்பற்றினார். காங்கிரஸ் உயிர் பெற்று 21 இடங்களைக் கைப்பற்றியது. பாஜகவுக்கு 6 இடங்களும் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 1 இடமும் கிடைத்தன. முன்னர் ஆட்சியில் இருந்த பன்சிலாலின் ஹரியானா விகாஷ் கட்சி இருந்த இடம் தெரியாமல் போய் 2 இடங்களில் தாக்குப் பிடித்தது. 5 ஆண்டுகள் சவுதாலா குழப்பம் இல்லாமல் ஆட்சியை நடத்தினார்.

2005, 2009 தேர்தல் முடிவுகள்: 2005-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அபாரமாக 67 இடங்களைக் கைப்பற்றியது. ஆட்சியில் இருந்த இந்திய தேசிய லோக் தள் கட்சிக்கு வெறும் 9 இடங்கள்தான் கிடைத்தன. அப்போது முதலே காங்கிரஸ் கை ஓங்கியே இருந்தது. 2009-ம் ஆண்டு தேர்தலிலும் காங்கிரஸ் 40 இடங்களிலும் இந்திய தேசிய லோக்தள் 31 இடங்களில் வெல்ல காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்தது.

2014, 2019 தேர்தல்கள்: 2014-ம் ஆண்டு தேர்தலில் இருந்து ஹரியானா தேர்தலில் பாஜக காற்று பலமாக வீசியது. 2014-ல் பாஜக 47 இடங்களையும் காங்கிரஸ் 15, இந்திய தேசிய லோக் தள் 19 இடங்களையும் கைப்பற்றின. 2019-ல் பாஜக 40, காங்கிரஸ் 31, லோக் தள் கட்சியை உடைத்த துஷ்யந்த் சவுதாலாவின் ஜேஜேபி 10, லோக் தள் கட்சி 1 இடம் என முடிவுகள் வெளியாகின.

haryana assembly election 2024 congress 2024

கொத்து பரோட்டா அரசியல்: ஹரியானா அரசியலானது பிற மாநிலங்களின் அரசியலைப் போல இரு கட்சி அரசியல், மூன்று அரசியல் கட்சி என்பதெல்லாம் எதுவும் கிடையாது. தேர்தலுக்கு தேர்தல் திடீர் திடீரென புதிய கட்சிகள் முளைப்பது; ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும் எப்படியும் 10,15 சுயேட்சைகள் ஜெயித்திருப்பார்கள் அவர்களை வளைத்துப் போட்டு அமைச்சர் பதவி கொடுப்பது.. முடிந்தவரை ஆட்சி நடத்துவது.. இல்லையெனில் கலைத்துவிட்டு மீண்டும் தேர்தலை சந்திப்பது என்கிற படுபயங்கரமான குழப்பத்தையே கோட்பாடாக வைத்திருப்பதுதான் ஹரியானா அரசியல்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+