நிதிஷ்- லாலுவின் கூட்டணியால் பீகாரில் அமோகமாக "மறுவாழ்வு" பெற்ற காங்கிரஸ்!
பாட்னா: பீகாரில் கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக இருந்த காங்கிரஸ் கட்சியானது நிதிஷ்குமார், லாலு பிரசாத் ஆகியோரது கூட்டணியில் சேர்ந்து அமோகமாக மறுவாழ்வு பெற்றுள்ளது.
பீகார் மாநிலத்தில் 1990 வரை ஆளும் கட்சியாக இருந்தது காங்கிரஸ் கட்சி. 1990ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 71 இடங்களில் மட்டுமே வென்று லாலுவிடம் மரண அடி வாங்கியது காங்கிரஸ்.
அதன் பின்னர் பீகார் மாநிலத்தில் தமிழகத்தைப் போல காங்கிரஸ் கட்சியால் எழவே முடியாமல் போனது. 1995ஆம் ஆண்டு தேர்தலில் 29, 2000ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 14, 2005ஆம் ஆண்டு தேர்தலில் 10 என்று கேட்பாரற்ற கட்சியாகப் போனது.

அதுவும் கடந்த 2010ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 243 தொகுதிகளிலும் போட்டியிட்டு வெறும் 4 இடங்களில்தான் வென்றது. இப்படி பீகாரில் காங்கிரஸ் பேரியக்கம் அழிந்தே போன நிலையில்தான் தற்போதைய தேர்தலில் நிதிஷின் ஐக்கிய ஜனதா தளம், லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் ஈகோ பார்க்காமல் காங்கிரஸ் கை கோர்த்தது.
காங்கிரஸ் கட்சிக்கு 41 இடங்கள் ஒதுக்கப்பட்டது. இன்றைய தேர்தல் முடிவுகளில் 20க்கும் அதிகமான தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றும் நிலை உள்ளது. இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் உற்சாகத்தையே தந்துள்ளது.
பீகாரில் தேடப்படுகிற நிலையில் இருந்த காங்கிரஸ் கூட்டணி புண்ணியத்தில் இப்போது அமோகமாக மறுவாழ்வு பெற்று இருப்பது அக்கட்சியினருக்கு நம்பிக்கையை விதைத்திருக்கிறது.
-
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications