தேமுதிகவுக்கு டெபாசிட் கிடைக்குமா? டெல்லியில் 74% வாக்குகள் பதிவு!
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் 74% வாக்குகள் பதிவாகி உள்ளன. இத்தேர்தல் பாஜக, காங்கிரஸ், கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிகளைவிட விஜயகாந்தின் தேமுதிகவுக்குத்தான் மிக முக்கிய'மான' ஒன்றாகும். வேறு எந்த தமிழக கட்சிகளும் டெல்லி தேர்தலில் போட்டியிடாத நிலையில் களம் இறங்கியுள்ள தேமுதிக டெபாசிட்டையாவது தக்க வைத்துக் கொள்ளுமா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
70 தொகுதிகளைக் கொண்டது டெல்லி மாநில சட்டசபை. இதற்கான தேர்தலில் காங்கிரஸ், பாரதிய ஜனதா, அர்விந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. அத்துடன் விஜயகாந்தின் தேமுதிகவும் 11 தொகுதிகளில் களமிறங்கியுள்ளது. டெல்லியில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் தேமுதிகவின் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

முதல்வர் வேட்பாளர்கள்
முதல்வர் பதவிக்கான வேட்பாளர்களாக காங்கிரஸ் சார்பாக ஷீலா தீட்சித், பாரதிய ஜனதா கட்சி சார்பாக ஹர்ஷ்வர்தன், ஆம் ஆத்மி கட்சி சார்பாக கெஜ்ரிவால் ஆகியோர் களம் இறக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

1 கோடியே 19 லட்சம் வாக்காளர்கள்
இன்றைய தேர்தலில் ஒரு கோடியே 19 லட்சம் பேர் வாக்களிக்கின்றனர். இதில் 4 லட்சத்து 5 ஆயிரம் பேர் முதல் முறையாக வாக்களிக்க உள்ளனர்.

810 வேட்பாளர்கள்
70 தொகுதிகளுக்கு மொத்தம் 810 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

களத்தில் யார்? யார்?
காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன. பாரதிய ஜனதா கட்சி 66 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இவை தவிர தே.மு.தி.க., சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகளும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன.

திராணி காட்டுமா தேமுதிக
இவற்றில் தேமுதிகதான் டெல்லி தேர்தல் களத்துக்கு புதுசு. தமிழகத்தில் கூட்டணி வைத்து கணிசமான இடங்களைக் கைப்பற்றியது தேமுதிக. தற்போது ஏற்காடு இடைத்தேர்தலில் கூட போட்டியிடாமல் தவிர்த்துவிட்டது. அத்துடன் எந்த கட்சிக்கு ஆதரவு என்ற நிலைப்பாடும் எடுக்கவில்லை. ஆனால் டெல்லியில் துணிகரமாக வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது. இது டெல்லியில் தனது திராணியை தேமுதிக வெளிப்படுத்துமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

74% வாக்குப் பதிவு
டெல்லியில் இன்று காலை 8 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் வாக்களித்தனர். மாலை 5 மணிவரை மொத்தம் 74% வாக்குகள் பதிவாகி இருக்கின்றன.

தமிழர் பகுதிகளில் 80% வாக்கு பதிவு
டெல்லியில் தமிழர்கள் அதிகம் வாழும் ஆர்.கே.புரம், கிரேட்டர் கைலாஷ் ஆகிய இடங்களில் சராசரியாக 80% வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. இதனால் தேமுதிகவுக்கு கணிசமான வாக்குகள் அல்லது குறைந்தபட்சம் டெபாசிட்டாவது கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்று கூறப்படுகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications