ம.பி.யில் சிவ்ராஜ்சிங், ராஜஸ்தானில் வசுந்தராராஜே முதல்வராகின்றனர்- கருத்து கணிப்பு
டெல்லி: மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியைக் கைப்பற்றும் என்று 'Samay Hub Pulse' கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samay Hub Pulse கருத்துக் கணிப்பில் மத்திய பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியைக் கைப்பற்றுவதன் மூலம் மீண்டும் மூன்றாவது முறை முதல்வர் என்ற பெருமையை தட்டிச் செல்லப் போகிறாராம் சிவ்ராஜ்சிங் சவுகான்.
அதேபோல் ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் அசோக் கெலாட் தலைமையிலான அரசை பாஜகவின் வசுந்தராஜே சிந்தியா வீழ்த்தி முதலமைச்சர் பதவியைக் கைப்பற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ம.பி.யில் பாஜகவுக்கு இடம் குறைவு
மத்திய பிரதேசத்தில் தற்போது தேர்தல் நடைபெற்றால் மொத்தம் உள்ள 230 இடங்களில் 124 இடங்களை பாஜக பெறலாம். கடந்த 2008 தேர்தலில் 143 இடங்களை அக்கட்சி பெற்றிருந்தது. 19 இடங்கள் குறைவாகப் பெற்றாலும் பெரும்பான்மைக்கு பிரச்சனை இருக்காதாம்.

வாக்கு சதவீதம்
பாஜகவுக்கு 37% வாக்குகளும் காங்கிரஸுக்கு 34% வாக்குகளும் கிடைக்குமாம்.

சிவ்ராஜ்சிங் சவுகானுக்கு 52% ஆதரவு
மாநில முதல்வராக சிவ்ராஜ்சிங் சவுகான் தொடர 52% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியாவுக்கு 21% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேபோல் சிவ்ராஜ்சிங்கின் செயல்பாடு திருப்தி அளிப்பதாக 58% பேர் தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் கெஜ்ரிவால் கட்சியால் பாதிப்பு
இக்கருத்துக் கணிப்பில் டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜக, காங்கிரஸ் இரண்டையும் கெஜ்ரிவால் கட்சி பதம் பார்க்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் 17 அல்லது 22 இடங்கள் கெஜ்ரிவால் கட்சிக்கு கிடைக்கும் என்றெல்லாம் கூறப்பட்டாலும் இக்கருத்து கணிப்பானது 6 இடங்கள்தான் கிடைக்கும் என்கிறது.

காங்கிரஸ்- பாஜக கடும் போட்டி
பாரதிய ஜனதாவுக்கு 32 இடங்களும் காங்கிரஸுக்கு 31 இடங்களும் கிடைக்குமாம்.

சத்தீஸ்கரில் கடும் போட்டி
சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறதாம். ஆளும் பாஜக 46 இடங்களையும் காங்கிரஸ் 42 இடங்களையும் கைப்பற்றுமாம். 2008 தேர்தலில் பாஜகவுக்கு 50 இடங்கள் கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications