இவர் ஏழை அல்ல பணக்கார சி.எம்.. திரிபுரா புதிய முதல்வரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

திரிபுரா மாநில முதல்வராக பிப்லாப் குமார் தேப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    திரிபுராவில் ஆட்சியை புடித்த பாஜக... ஏழை முதல்வரை வீட்டுக்கு அனுப்பிய மக்கள் - வீடியோ

    கவுகாத்தி: திரிபுரா மாநில முதல்வராக பிப்லாப் குமார் தேப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். திரிபுராவில் பாஜக அபார வெற்றி பெற்றுள்ளது.

    25 ஆண்டுகளாக திரிபுராவில் இருந்த மார்க்சிஸ்ட் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. மக்கள் முன்னணி கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட பாஜக 43 இடங்களைக் கைப்பற்றியது. பாஜக 35 இடங்களையும், திரிபுரா மக்கள் முன்னணி கட்சி 8 இடங்களையும் கைப்பற்றியது.

    இடதுசாரிகள் 16 இடங்களில் வென்று இருக்கிறார்கள். காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. இதன் மூலம் இந்தியாவின் ஏழை முதல்வர் தனது பதவியை இழந்து இருக்கிறார்.

    மாணிக் சர்க்காருக்கு எவ்வளவு சொத்து

    மாணிக் சர்க்காருக்கு எவ்வளவு சொத்து

    59 வயதான மாணிக் சர்க்காருக்கு‍ முதல்வருக்கு வழங்கப்படும் சம்பளம் மட்டும் கொடுக்கப்பட்டது. மாத ஊதியமாக 9,200 ரூபாயும் அலவன்சாக 1,200 ரூபாயும் கொடுக்கப்பட்டது.அந்த சம்பளத்தையும் அவர் கட்சி வளர்ச்சிக்கு தந்து‍விடுகிறார்.

    கட்சி உதவி

    கட்சி உதவி

    மாணிக் சர்க்கார் கட்சி தரும் 5,000 ரூபாயில் வாழ்க்கையை நடத்தி வருகிறார்.இவருக்கென்று‍ தனியாக சொந்தமாக வீடோ, நிலமோ, நகையோ கிடையாது. இதன் காரணமாகவே இவர் பல ஆண்டுகளாக ஏழை முதல்வராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பிப்லாப் குமார் தேப்

    பிப்லாப் குமார் தேப்

    திரிபுரா மாநில முதல்வராக பிப்லாப் குமார் தேப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிப்லாப் குமார் தேப் திரிபுரா மாநில பாஜக தலைவராக கடந்த 2016ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். இவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் தீவிரமாக வேலை செய்து வந்தவர் என்பதும் குறிப்பிடதக்கது. இவர் பண்ணாமலிபூர் தொகுதியில் வெற்றிபெற்றுள்ளார்.

    சொத்து மதிப்பு

    சொத்து மதிப்பு

    இவர் தன்னிடம் ரூபாய் 2,13,93,539 மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாக கூறியுள்ளார். இது இவர் பேரில் மட்டும் இருக்கும் சொத்துக்கள் ஆகும். இது இல்லாமல் இவர் மனைவியின் பெயரில் நிறைய சொத்துக்கள் இருக்கிறது.

    வருமானம்

    வருமானம்

    சொத்துக்கள் போக இவருக்கு ஆண்டு வருமானம் ரூபாய் 2,99,290 வருகிறது. அதேபோல் இவரது மனைவிக்கு ஆண்டு வருமானம் ரூபாய் 9,01,910 வருகிறது. இவரது மனைவி டெல்லி ஸ்டேட் பேங்க் வங்கியில் மேனேஜராக இருக்கிறார்.

    பணம்

    பணம்

    இவருக்கு கையில் பணமாக ரூபாய் 90,500 இருக்கிறது என்றுள்ளார். வங்கியில் நான்கு அக்கவுண்ட்களில் ரூபாய் 61,93,037 பணம் இருக்கிறது. ஷேர் மார்க்கெட்டில் ரூபாய் 60,000 பணம் இருக்கிறது என்றுள்ளார். அதேபோல் இன்சூரன்ஸ் தொகை ரூபாய் 10,10,002 இருக்கிறது.

    மற்ற விவரம்

    மற்ற விவரம்

    மேலும் இவர் வைத்து இருக்கும் கார், பைக்குகள் விவரம் வெளியாகவில்லை. ஒரு பைக்கிற்கு மட்டும் ரூபாய் 1,60,000 கணக்குக்காட்டி இருக்கிறார். 3,00,000 ரூபாய் மதிப்பிற்கு நகை இருக்கிறது. மற்ற சொத்துக்கள், சிறு சிறு பொருட்களில் மதிப்புகள் ரூபாய் 80,000 ஆகும். இது இவர் தேர்தலில் போட்டியிட காட்டிய சொத்து விவரங்கள் ஆகும்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+