மம்தா ஜாதகப்படி பாஜக கூட்டணிதான் “பெஸ்ட்” - சொல்கிறார்கள் ஜோசியர்கள்
கொல்கத்தா: தேர்தல் கூட்டணியை கட்சிகள் நிர்ணயிக்கிறதோ, இல்லையோ சில ஜோசியர்கள் மிக வேகமாக கணித்து கூட்டணியை முடிவு செய்கிறார்கள்.
இதனால் ஜோசியர்களின் காட்டில் அரசியல்வாதிகளால் பணமழை பெய்ய ஆரம்பித்துள்ளது.
மம்தா பானர்ஜியின் ஜாதகப்படி அவர் பாஜக கூட்டணியில் இணைவார் என்று சில ஜோசியர்கள் கூறிவருகின்றனர்.

பிசியான ஜோசியர்கள்:
மேற்குவங்க மாநிலத்தில் ஜோசியர்கள், கைரேகை நிபுணர்கள், எண்கணித நிபுணர்கள் ஆகியோர் படு பிசியாகவுள்ளனர்.

இதில் பாகுபாடே இல்லை:
கட்சி பாகுபாடின்றி அனைத்து வேட்பாளர்களும் தங்களின் வெற்றி நிலவரத்தை அறிந்து கொள்ள பிரபல ஜோசியர்களை பார்த்து வருகின்றனர்.

மம்தாவின் ஜாதகம்:
முதல்வர் மம்தாவின் ஜாதகத்தையும் ஜோசியர்கள் தீவிரமாக ஆராய்ந்துள்ளனர். அரசுக் குறிப்பின்படி அவரது பிறந்த தேதி 5.1.1955 என்பதன் படி அவரது ஜாதகம் கணிக்கப் பட்டுள்ளது.

வெற்றி நிச்சயம்:
அவரது ஜாதகத்தை ஆராய்ந்த தேபாசிஸ் ஜென் என்ற ஜோசியர் ‘‘மம்தாவின் ஜாதகத்தில் ராகு நல்ல நிலையில் உள்ளார். இந்த நிலை மே இறுதி வரை தொடரும். சந்திரனில் இருந்து 6 ஆம் இடத்தில் ராகு இருப்பதால் மம்தாவுக்கு வெற்றி நிச்சயம். மேலும் மம்தாவுக்கு சனி திசையுடன் குருவும் வக்கிரத்தில் உள்ளார். இது ஜனவரி 5 ஆம் தேதி வரை தொடரும்'' என கூறியுள்ளார்.

நமோதான் பிரதமர்:
மற்ற ஜோசியர்கள் கூறுகையில் ‘‘பாஜக நாயகன் நரேந்திர மோடிதான் அடுத்த பிரதமர். கூட்டணியில் இல்லாத கட்சிகளின் ஆதரவுடன் மோடி ஆட்சி அமைப்பார். அதில் முக்கியமாக மோடி அமைச்சரவையில் மம்தா இணைவார்'' என்று கணித்துக் கூறியுள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications