கையில் துடைப்பத்துடன் வீதியில் இறங்கிய பாஜக அமைச்சர்.. ஆனால் அந்த "கேப்ஷன்தான்" அல்டிமேட்!
ஹோகிமா: நாகலாந்து மாநில பாஜக அமைச்சர் டெம்ஜென் இம்னா அலாங். ரசிக்க வைக்கும் நகைச்சுவை பாணியில் ட்விட்டரில் பதிவிடுகளை போடுவதில் கில்லாடியான டெம்ஜென் இம்னா, தற்போது கையில் துடைப்படத்துடன் வீதியை சுத்தம் செய்வது போன்ற ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதற்கு கொடுத்த கேப்ஷன் நெட்டிசன்களை ரசிக்க வைக்கும் வவையில் அமைந்துள்ளது.
நாகலாந்தில் ஆளும் பாஜகவை சேர்ந்தவர் டெம்ஜென் இம்னா அலோங். அந்த மாநில உயர் கல்வி மற்றும் பழங்குடியினர் விவகார அமைச்சராகவும் டெம்ஜென் இம்னா அலோங் இருக்கிறார்.
வடகிழக்கு மாநில மக்களின் முக அமைப்பு கொண்ட டெம்ஜென் இம்னா சற்று குண்டாகவும் சிறிய கண்கள் கொண்டவராகவும் இருப்பார்.

நாகாலாந்து அமைச்சர்
இதனால் டெம்ஜென் இம்னா நெட்டிசன்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். இணையத்தில் ரசிக்க வைக்கும் வகையில் ஜாலியாக பதிவு போடுவதை வாடிக்கையாக டெம்ஜென் இம்னா கொண்டு இருக்கிறார். இதனால், அவருடைய ஒவ்வொரு பதிவும் இணையத்தில் வேகமாக பரவும். கடந்த சில வாரங்களுக்கு முன்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் ''நீங்கள் அழகாகவும் சிங்கிளாகவும் இருந்தால், எங்கு சென்றாலும் புகைப்படம் எடுப்பவர்களை கவர்ந்து விடுவீர்கள், பிரபலத்தை போல உணர்கிறேன்'' என்று பதிவிட்டு இருந்தார்.

சிங்கிளாக இருங்கள் என்றவர்
இந்த ட்விட் பதிவுகள் நெட்டிசன்களை வெகுவாக ரசிக்க வைத்தது அதேபோல், மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த என்னைப் போலவே சிங்கிளாக இருங்கள் என்றும் டெம்ஜென் இம்னா பதிவிட்டு கலாய்த்து இருந்தார். அவரது பதிவுகளை உடனடியாக பகிர்ந்து அதற்கு கருத்துக்களையும் பதிவிட்டு டிரெண்ட் ஆக்கி விடுவர். இப்படி பல முறை மிகவும் வேடிக்கையாகவும் நகைச்சுவையாகவும் டெம்ஜென் இம்னா அலோங் தனது ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்.

தெருக்களை சுத்தம் செய்வது போன்ற
இவரது பதிவுகளுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது என்று சொல்லும் அளவுக்கு இணையத்தில் டெம்ஜென் இம்னா அலோங் போடும் பதிவுகள் இணையத்தில் அதிகம் பரவி நெட்டிசன்கள் மத்தியில் கவனத்தை ஈர்க்கும். அந்த வகையில், டெம்ஜென் இம்னா தனது ட்விட்டரில் நேற்று தெருக்களை சுத்தம் செய்வது போன்ற ஒரு புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார். அந்த புகைப்படத்தில் தனக்கே உரிய நகைச்சுவை பாணியில், குறைந்தபட்சம் புகைப்படத்திற்காகவாவது அதிகமாக தூய்மை பணியில் ஈடுபடுங்கள். அதிக போட்டோக்கள் நீங்க எடுக்க எடுக்க அதிக இடங்கள் தூய்மை ஆகும்" என்று பதிவிட்டு இருக்கிறார்.

நெட்டிசன்கள் கலகல கருத்து
டெம்ஜன் இம்னாவின் இந்த பதிவு இணையத்தில் அதிகம் பரவி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர். அதேபோல், டெம்ஜென் இம்னாவின் நகைச்சுவை உணர்வை பாராட்டி நெட்டிசன்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர். ஒரு நெட்டிசன் கூறும் போது, தனது நகைச்சுவையான கேப்ஷனுக்காகவே தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கிறார் அமைச்சர் டெம்ஜென் இம்னா" என்று பதிவிட்டு இருக்கிறார். அதேபோல் மற்றொரு நெட்டிசன் கூறுகையில், சுத்தம் செய்யுங்கள்.. போட்டோ எடுத்துக்கொண்டே இருங்கள் என்ற புதிய கோஷத்தை பிரபலப்படுத்தியிருக்கிறார் என பதிவிட்டுள்ளார். இதுபோல நெட்டிசன்கள் பலரும் டெம்ஜென் இம்னாவின் பதிவுக்கு நகைச்சுவையான கருத்துக்கள் போட்டு அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.
-
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்!












Click it and Unblock the Notifications