சிசிடிவி கேமராவோடு ஏ.டி.எம். எந்திரம் அபேஸ்
டெல்லி: மேற்கு டெல்லியில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் இருந்த பண எந்திரத்தை திருடர்கள் கொள்ளையடித்துள்ளனர்.
மேற்கு டெல்லியில் உள்ள நரேலா பகுதியில் யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் ஏ.டி.எம். மையம் உள்ளது. அந்த மையத்தில் காவலாளி இல்லை. ஆனால் சிசிடிவி கேமரா உண்டு. இந்நிலையில் இன்று காலை துப்புரவு தொழிலாளி ஒருவர் மையத்தில் ஏ.டி.எம். எந்திரம் மாயமானதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தபோது எந்திரத்தோடு அங்கிருந்த சிசிடிவி கேமராவும் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. மேலும் திருடர்கள் முதலில் தெரு விளக்கை உடைத்துவிட்டு மையத்திற்குள் நுழைந்து ஏ.டி.எம். எந்திரத்தை கொள்ளையடித்துள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இத்தனை நாட்களாக காவலாளி இல்லா ஏ.டி.எம். மையங்களில் திருட்டு நடந்தால் சிசிடிவி கேமராவில் பதிவானவற்றை வைத்து போலீசார் திருடர்களை பிடித்தனர். ஆனால் இம்முறை திருடர்கள் சிசிடிவி கேமராவையே திருடிவிட்டு சென்றுள்ளனர்.
திருடர்களின் இந்த தெளிவான திருட்டு அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications