தாக்கப்பட்ட தமிழ் இளைஞர் சந்தோஷ் பெங்களூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர்!
பெங்களூரு: பெங்களூரில் கும்பல் ஒன்றால் தாக்கப்பட்ட தமிழ் இளைஞர் சந்தோஷ் பெங்களூரிலேயே பிறந்து வளர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது.
பெங்களூரு ஸ்ரீராமபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ். கல்லூரி மாணவரான இவரை கிரி நகரில் வைத்து ஒரு கும்பல் சரமாரியாக தாக்கும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தாக்குல் வீடியோ பல்வேறு கன்னட டிவி சானல்களில் ஒளிபரப்பாகியுள்ளன. தற்போது பெரும் பரபரப்பாக வலம் வரும் இந்த வீடியோவில் தாக்குதலுக்கு ஆளான இளைஞர் சந்தோஷ் தனது பேஸ்புக்கில், காவிரிப் போராட்டம் தொடர்பாக போட்ட பதிவுதான் அவர் தாக்குதலுக்குள்ளாக காரணம் என்று கூறப்படுகிறது.
நடிகர்கள் சிவராஜ் குமார், தர்ஷன் குறித்தும், கன்னட திரையுலகினரின் போராட்டத்தையும், தமிழ் நடிகர்களையும் ஒப்பிட்டு அவர் கருத்து போட்டதால் ஆத்திரமடைந்த கும்பல் சந்தோஷைத் தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து சந்தோஷ் தரப்பில் போலீஸில் புகார் தரப்படவில்லை என்று தெரிகிறது. இதனால் போலீஸ் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். அதேசமயம், தாக்குதல் குறித்த வீடியோ காட்சிகளை கன்னட சானல்களே ஒளிபரப்பியும் கூட பெங்களூர் போலீஸ் தரப்பில் எந்த நடவடிக்கையும் இல்லை. அரசுத் தரப்பிலோ அல்லது காவல்துறை தரப்பிலோ எந்த கருத்தும் இதுவரை வெளியாகவில்லை.
பெங்களூரில் பிறந்து வளர்ந்த ஒருவரே இப்படித் தாக்குதலுக்குள்ளாகியிருப்பது அங்கு வசிக்கும் தமிழர்கள் மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications