உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிரச்னை தீரவில்லை... அட்டர்னி ஜெனரல் தகவல்!
உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிரச்னை தீரவில்லை... அட்டர்னி ஜெனரல் தகவல!
Recommended Video

டெல்லி : உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, நீதிபதிகள் இடையேயான பிரச்னை தீர வேண்டும் என்றே விரும்புவதாகவும் 3 நாட்களில் இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்றும் மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் கூறியுள்ளார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, நீதிபதிகள் இடையேயான பிரச்னை முடிவுக்கு வந்துவிட்டதாக இந்திய பார்கவுன்சில் நேற்று அறிவித்தது. இந்நிலையில் மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் பிரச்னை இன்னும் தீரவில்லை என்று கூறியுள்ளார்.

நீதிபதிகள் பிரச்னை குறித்து கருத்து தெரிவித்த அட்டர்னி ஜெனரல் வேணுகோபால், தலைமை நீதிபதி மீது நீதிபதிகள் 4 பேர் குற்றச்சாட்டு வைத்தது மிக முக்கியமா பிரச்னை. இந்த பிரச்னை விரைவில் தீர வேண்டும் என்றே நான் நம்புகிறேன், தற்போதைய சூழலில் நிலைமை கட்டுக்குள் உள்ளது. விரைவில் முழுவதும் தீர்வு காணப்படும் என்று கூறியுள்ளார்.
தலைமை நீதிபதியை சந்தித்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த வேணுகோபால், தான் யாரையும் சந்திக்கவில்லை என்று கூறியுள்ளார். உச்சநீதிமன்ற செயல்பாடுகள் குறித்து குற்றச்சாட்டு முன் வைத்த நீதிபதிகள் 4 பேரும் தங்களது பணிக்குத் திரும்பியுள்ளதாவும் வேணுகோபால் தெரிவித்தார்.
ஜனவரி 12ம் தேதி நீதிபதி செல்லமேஸ்வர் உள்ளிட்ட 4 நீதபிதிகள் பத்திரிக்கையாளர்களை சந்தித்தது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்று கூறி இருந்தார் வேணுகோபால்.












Click it and Unblock the Notifications