அதிவேகமாக பாய்ந்த மம்தா கட்சி பிரமுகரின் 'ஆடி' கார்.. விமானப்படை அதிகாரி பரிதாப சாவு
கொல்கத்தா: திரினாமுல் காங்கிரஸ் கட்சி பிரமுகர் மகன் கார் மோதி இந்திய விமானப்படை அதிகாரி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கொல்கத்தாவின் ரெட் ரோடு பகுதியில் காலை நேரத்தில் விமானப்படை வீரர்களின், ட்ரில் பயிற்சி நடைபெறுவது வழக்கம். அந்த காலகட்டத்தில், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு சாலை மூடப்பட்டுவிடும்.
இன்று காலை இதுபோன்ற ட்ரில் பயிற்சி நடைபெற்றபோது, 21 வயதாகும், ட்ரில் நெறியாளர் அபிமன்யு காட் பணியாற்றிக்கொண்டிருந்தார்.
IAF's Corporal Abhimanyu Gaud. Killed not in enemy action, but by a coward in a speeding Audi. He was just 21. RIP. pic.twitter.com/y4iW4NafNz
— Shiv Aroor (@ShivAroor) January 13, 2016 தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் அதி வேகமாக வந்தது ஆடி நிறுவனத்திற்கு சொந்தமான ரேஸ் வகை கார். வந்த வேகத்தில் அபிமன்யுவின் காலை இடித்து தூக்கி வீசிவிட்டு, தடுப்பு கம்பிகளில் மோதி நின்றது. அதிலிருந்த டிரைவர் தப்பியோடிவிட்டார்.
படுகாயமடைந்த அபிமன்யூ மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அதற்குள் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துவிட்டனர்.

இந்நிலையில், விபத்துக்கு காரணமான கார் மம்தா பானர்ஜியின், திரினாமுல் கட்சி பிரமுகர் முகமது சோரப்பின் மகன் அம்பியா சோரப்புக்கு சொந்தமானது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
காரை அவர்தான் ஓட்டியிருக்க வேண்டும் என்றாலும், அதை அவர் மறுக்க கூடும் என்பதால் சிசிடிவி காட்சிகள் சோதித்து பார்க்கப்பட்டுவருகிறது. இச்சம்பவம் கொல்கத்தாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications