பிரட் லீ படத்தில் தேவையில்லாத "சீன்".. கத்திரிக்கோலை கையில் எடுத்த சென்சார்!

Subscribe to Oneindia Tamil

மும்பை: முன்னாள் ஆஸ்திரேலிய வேகப் பந்து வீச்சாளர் பிரட் லீ நடித்துள்ள UnIndian படத்தில் இடம் பெற்றுள்ள முத்தம் மற்றும் காதல் காட்சிக்கு சென்சார் போர்டு ஆட்சபேனை தெரிவித்துள்ளது. அதை நீக்க வேண்டும் என்றும் அது திட்டவட்டமாக கூறி விட்டது.

ஏற்கனவே மத்திய தணிக்கை வாரியத்திடம் சிக்கி உத்தா பஞ்சாப் படம் படாதாபாடு பட்டது. தற்போது பிரட் லீ படம் சிக்கியுள்ளது. இப்படத்தில் பிரட் லீயும், நடிகை தனிஷ்தா சாட்டர்ஜியும் பங்கேற்ற முத்தம் மற்றும் காதல் காட்சிக்குத்தான் சென்சார் போர்டு ஆட்சேபனை தெரிவித்துள்ளது.

படத்தில் இந்தக் காட்சி ஒரு நிமிடம் 8 விநாடிகளுக்கு வருகிறது. இதை மேலும் குறைக்குமாறு சென்சார் போர்டு உத்தரவிட்டுள்ளது. அதாவது 26 விநாடிகளுக்கு மேல் காட்சி போகக் கூடாது என்று சென்சார் போர்டு கூறியுள்ளதாம்.

செக்ஸி காட்சி

செக்ஸி காட்சி

மேலும் இப்படத்தில் வரும் ஒரு செக்ஸியான காட்சியின் பின்னணியில் வேத மந்திரம் ஓதுவது போல உள்ளதாம். அதையும் கட் செய்யச் சொல்லி விட்டதாம் சென்சார் போர்டு.

வெட்டினால் நல்லது

வெட்டினால் நல்லது

இந்த வெட்டல்களை செய்தால் படத்திற்கு யுஏ சான்றிதழ் கிடைக்கும் என்றும் சென்சார் போர்டு கூறியுள்ளதாம். இதுகுறித்து இயக்குநர் அனுபம் சர்மா கூறுகையில், இதென்ன நிபந்தனை என்று புபரியவில்லை. மத ரீதியான எந்தக் காட்சியும் இதில் இல்லை. இறை ரீதியான காட்சியையும் கூட நாங்களாக சேர்க்கவில்லை. நானே ஒரு இந்து. நான் எப்படி எனது மதத்தை புண்படுத்துவேன் என்று எனக்குப் புரியவில்லை என்றார்.

காமசூத்திரா நாட்டில் இப்படி ஒரு சென்சார்!

காமசூத்திரா நாட்டில் இப்படி ஒரு சென்சார்!

மேலும் அவர் கூறுகையில் காமசூத்திராவை உலகுக்கு அளித்ததே இந்தியாதான். அந்த நாட்டில் இப்படி ஒரு சென்சார் போர்டு. இப்படத்தில் ஒரு காட்சியில் வெற்று முதுகை காட்டியபடி ஹீரோவும், ஹீரோயினும் வருகிறார்கள். கலைநயத்தோடு அதை எடுத்துள்ளோம். அதை சைடு போஸில் காட்டக் கூடாது என்று கூறியுள்ளது சென்சார் போர்டு. நாங்கள் ஆபாசமாக எதையும் காட்டவில்லை.

அதை விடவா!

அதை விடவா!

இந்தியாவில் உள்ள பல டிவி சானல்களில் வரும் ஆபாசத்தை விட பல மடங்கு குறைவான காட்சிகளே எங்களது படத்தில் உள்ளது. ஆனால் சென்சார் போர்டு அதிலும் கத்திரிக்கோலை வைக்கிறது. எனது படத்தில் சென்சார் போர்டு சொன்ன பரிந்துரைகளை செய்ய நான் தயாராக இருக்கிறேன். எனது பிடிவாதத்திற்காக ரசிகர்களை ஏமாற்ற நான் விரும்பவில்லை. திட்டமிட்ட நேரத்தில் படம் வெளியாக வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்றார் அவர்.

சிட்னியில் படமான திரைப்படம்

சிட்னியில் படமான திரைப்படம்

அன்இந்தியன் சிட்னியில் படமாக்கப்பட்ட கதையாகும். பிரட் லீ, தனிஷ்தா சாட்டர்ஜி ஜோடியாக நடித்துள்ளனர். கடந்த ஆண்டு இப்படம் வெளியானது. இப்போது இந்தியாவுக்கு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+