10 ராணுவ வீரர்களை பலி கொண்ட சியாச்சின்... ஆய்வு மையம் முன்னெச்சரிக்கை விடுத்ததாக புது சர்ச்சை
சண்டிகர்: 10 ராணுவ வீரர்களை பலி கொண்ட இமயமலையின் சியாச்சின் பகுதியில் குறைவான அபாயம் கொண்ட பனிச்சரிவு ஏற்படும் என்று முன்னதாகவே எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக பனிச்சரிவு தொடர்பான சண்டிகர் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சியாச்சின் பகுதியில் கடந்த 3-ந் தேதியன்று பயங்கர பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் மெட்ராஸ் ரெஜிமெண்ட்டைச் சேர்ந்த 10 ராணுவ வீரர்கள் சிக்கினர்.

கடந்த 2 நாட்களாக அவர்களை உயிருடன் மீட்கும் பணி நடைபெற்றது. ஆனால் இந்த முயற்சி வெற்றிபெறவில்லை. இதனைத் தொடர்ந்து 10 ராணுவ வீரர்களும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சியாச்சின் பகுதியில் "குறைவான அபாயம் கொண்ட பனிச்சரிவு " இருப்பதாக பிப்ரவரி 2-ந் தேதியன்றே இது தொடர்பான சண்டிகரைச் சேர்ந்த எஸ்.ஏ.சி.இ. என்ற ஆய்வு மையம் ராணுவத்துக்கு எச்சரிக்கை கொடுத்திருந்ததாக அதன் இயக்குநர் அஸ்வகோஷா கஞ்சு தெரிவித்திருக்கிறார்.
அதே நேரத்தில் "குறைவான பனிச்சரிவு அபாயம்" என எச்சரிக்கை விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து ராணுவம் ஏதேனும் நடவடிக்கை எடுத்ததாக என்பது பற்றி தெரியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
10 ராணுவ வீரர்கள் பலியான நிலையில் முன்னெச்சரிக்கையை ராணுவத்தினர் எப்படி அணுகினர் என்பது புதிய சர்ச்சையாக உருவாகி உள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications