திறக்கப்பட்ட ராமர் கோவில்.. நெற்றியில் கவனிச்சீங்களா நாமத்தை! ஆஹா தென்கலையா? என்ன காரணம்?
லக்னோ: அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட்டுள்ள நிலையில் கண்கள் திறக்கப்பட்ட ராமரின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. ராமரின் நெற்றியில் இருக்கும் நாமம் கவனம் பெற்றுள்ளது.
அயோத்தி ராமர் கோவில் பூஜை விமர்சையாக நடைபெற்று வருகிறது. இன்று கோவில் கும்பாபிஷேகம் பிரதமர் மோடி , உத்தர பிரதேச முதல்வர் ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் முன்னிலையில் நடைபெற்றது. இவர்கள் முன்னிலையில் அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. விழாவுக்கான சடங்கு சம்பிரதாயங்கள் அடங்கிய பூர்வாங்க பூஜைகள் கடந்த ஒரு வாரமாக நடந்து வந்தது.

கோவில்: இந்த ஆலயம் முற்றிலும் நாட்டின் பாரம்பரிய மற்றும் உள்நாட்டு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய கோவிலின் சில முக்கிய அம்சங்கள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன.
திறப்பு விழா: ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்தத்தின்படி, ராமர் கோயில் மூன்று அடுக்குகளைக் கொண்ட கோயிலாகும், ஒவ்வொரு தளமும் 20 அடி உயரத்தில் உள்ளது. இது மொத்தம் 392 தூண்களையும் 44 கதவுகளையும் கொண்டுள்ளது. அயோத்தியில் ராமர் கோவிலுக்குச் செல்லும் பிரதான நுழைவாயில் யானைகள், சிங்கங்கள், ஹனுமான் மற்றும் 'கருடா' போன்ற சிலைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகள் ராஜஸ்தானின் பன்சி பஹர்பூர் பகுதியில் இருந்து பெறப்பட்ட மணற்கல்லைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.
பாரம்பரிய நாகரா பாணியில் கட்டப்பட்ட கோயில் வளாகம், 380 அடி நீளம் (கிழக்கு-மேற்கு திசை), 250 அடி அகலம் மற்றும் 161 அடி உயரம் கொண்டது. கோவிலின் ஒவ்வொரு தளமும் 20 அடி உயரத்தில் மொத்தம் 392 தூண்கள் மற்றும் 44 வாயில்களைக் கொண்டிருக்கும்.
சிலை: அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட்டுள்ள நிலையில் கண்கள் திறக்கப்பட்ட ராமரின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. ராமரின் நெற்றியில் இருக்கும் நாமம் கவனம் பெற்றுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் கோவிலின் கருவறை உள்ளே ராமர் சிலை கிரேன் உதவியுடன் வைக்கப்பட்டது. இதன் புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது.
கையில் வில் அம்பு எதுவும் இன்றி சாந்தமான தோற்றத்துடன், கரு நிற கல்லில் இந்த சிலை வைக்கப்பட்டு உள்ளது. சிறுவன் வடிவத்தில் ராமர் சிலை வடிக்கப்பட்டு உள்ளது. இது பாலக ராமர் சிலை வடிவம் ஆகும்.
நாமம்: ராமர் சிலையின் மேல் தென்கலையின் நாமம் போடப்பட்டு உள்ளது என்று சிலர் கூறுகின்றனர். சிலர் இது பொதுவான நாமம் என்கின்றனர். பொதுவாக வடமாநிலங்களில் தென்கலை மட்டுமே இருக்கும். வடகலை பிரிவு பெரும்பாலும் தென்னிந்தியாவில்தான் அதிகம் இருக்கும். வடகலை சமஸ்கிருத பாரம்பரியத்தின் அடிப்படையில் வடகலை சம்பிரதாயத்தை ராமானுஜர், வேதாந்த தேசிகர் உருவாக்கினர்.
அதே சமயம் தென் கலை பிரிவு என்பது பிள்ளை லோகாச்சார்யா பொதுவாக தென்கலை பிரிவின் நிறுவனராகக் கருதப்படுகிறார், மணவாள அல்லது வரவர முனி (1370-1443) அதன் மிக முக்கியமான தலைவராகக் கருதப்படுகிறார்.
வேறுபாடு: இதில் தென்கலை நாமம் ஷார்ப்பாக முடியும். வடகலை நாமம் வளைந்து ஷார்ப் இல்லாமல் முடியும். இப்போது ராமர் சிலையில் நாமம் தென்கலை நாமம் என்று சொல்லப்படுகிறது.
ஆனால் சிலரோ இது இரண்டும் இல்லை.. நாமம் ஷார்ப்பாக முடியும், வளைவாக முடியாமல் சதுரம் போல முடிகிறது. அதனால் இது பொது நாமம் என்று குறிப்பிடுகின்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications