‛‛கண்திறந்த பால ராமர்’’.. அயோத்தி ராமர் கோவிலில் கும்பாபிஷேகம் நிறைவு.. கோலாகலமான நிகழ்ச்சி நிரல்

Subscribe to Oneindia Tamil

அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடந்து முடிந்தது. கருவறையில் பிரதமர் மோடி சடங்குகள் செய்து கும்பாபிஷேகம் நடத்தினார். இதையடுத்து பால ராமரின் கண் திறக்கப்பட்டது.

இந்தியாவில் 500 ஆண்டுகளாக அயோத்தி ராமர் கோவில் பிரச்சனை இருந்தது. வன்முறைகள், சட்ட போராட்டம் என்று இந்த பிரச்சனை நீண்ட நெடிய வரலாற்றை கொண்டுள்ளது. இந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் 2019ல் முடிவுரை எழுதப்பட்டது.

Ayodhya Ram Mandir Opening in Tamil: At What Time Pran Pratishtha to held Today?

2019ல் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மூலம் அயோத்தி பிரச்சனை என்பது முடிவுக்கு வந்தது. அதாவது உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரியதாக கருதப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதி கொடுத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இதையடுத்து ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்தா சேத்ரா அறக்கட்டளையை மத்திய அரசு அமைத்தது. அதன்பிறகு 2020ல் பிரதமர் நரேந்திர மோடி ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டிய நிலையில் பணிகள் தொடங்கின. நாகரா கட்டக்கலையை அடிப்படையாக கொண்டு 3 அடுக்குகளாக கோவில் கட்டும் பணி நடந்தது. மொத்தம் ரூ.1800 கோடி மதிப்பீட்டில் கோவில் கட்டுமானம் நடத்த திட்டமிடப்பட்டது.

தற்போது ரூ.900 கோடி மதிப்பீட்டில் கோவிலின் முதற்கட்ட கட்டுமான பணி முடிவடைந்துள்ளது. இதையடுத்து தான் இன்று அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தையொட்டி 7 நாள் பூஜைகள், சடங்குகள் கோவிலில் தொடங்கியது. கடந்த 18 ம் தேதி கோவில் கருவறையில் 5 வயது குழந்தை பருவ ராமர் சிலை நிறுவப்பட்டது.

இந்த சிலை தான் இன்று பிரதிஷ்டை நடந்தது. கோவில் கருவறையில் உள்ள சிலைக்கு இன்று அர்ச்சகர்கள் பூஜை, சடங்குகள் செய்தனர்.. இதில் பிரதமர் நரேந்திர மோடியும் பங்கேற்று சடங்குகள் செய்தார். அதன்பிறகு பால ராமரின் கண்கள் திறக்கப்பட்டது. இதன்மூலம் கும்பாபிஷேகம் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

அதன்பிறகு பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினார். நாளை முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர். முன்னதாகஅயோத்தி ராமர் கோவிலில் இன்று நடக்கும் கும்பாபிஷேக விழாவில் சடங்குகள் இன்று காலையில் கோவிலில் வழக்கம்போல் நடைபெற்றது.

அதன்பிறகு காலை 10 மணி முதல் இரண்டு மணி நேர இசை நிகழ்ச்சி நடைபெற்றது. சங்கீத் நாடக அகாடமி சார்பில் இந்த நிகழ்ச்சி நடந்தது. இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த இசை கலைஞர்கள் பங்கேற்றனர். 'மங்கள் த்வானி' எனப்படும் இந்த இசை நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட பாரம்பரிய இசைக் கருவிகள் வாயிலாக கச்சேரி நடத்தப்பட்டது.

உத்தர பிரதேசத்தில் இருந்து பக்காவாஜ், புல்லாங்குழல், டோலக், கர்நாடகாவில் இருந்து வீணை, பஞ்சாபில் இருந்து அல்கோஜா, மஹாராஷ்டிராவில் இருந்து சுந்தரி, ஆந்திராவின் கடம், ஜார்க்கண்டின் சிதார், குஜராத்தின் சந்தார், பீஹாரின் பகாவாஜ், உத்தராகண்டின் ஹூட்கா, தமிழகத்தின் தவில், மிருதங்கம், நாதஸ்வரம் உள்ளிட்ட கலைஞர்களின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த இசை நிகழ்ச்சி என்பது 12 மணிக்கு முடிவடைந்த பிறகு தான் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா தொடங்கிறது. பிரதமர் மோடி 12.05 மணிக்கு கோவிலுக்கு வந்தார். வருகிறார். கும்பாபிஷேகம் என்பது மதியம் 12.15 முதல் 12.45 மணிக்குள் நடைபெற்று முடிந்தது.

இதில் 12.29 நிமிடம் 8 வினாடி முதல் 12.30 நிமிடங்கள் 32 வினாடிகள் தான் மிக நல்ல நேரம் என கூறப்படுகிறது. இந்த நேரத்தில் பால ராமர் சிலைக்கு பிரதிஷ்டை சடங்குகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் மொத்தம் 3 ஆயிரம் விவிஐபிக்கள் உள்பட 8 ஆயிரம் பேர் வரை கலந்து கொண்டனர். இவர்கள் கோவில் மண்டபத்தில் அமர்ந்து கும்பாபிஷேக விழாவை பார்த்து தரிசனம் செய்தனர். விழா முடிவில் பங்கேற்ற பிரபலங்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

அதோடு பிரபலங்கள் எளிதாக அயோத்தி கோவில் வந்து செல்லும் வகையில் அயோத்தி விமான நிலையங்களில் கூடுதல் விமானங்கள் தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. மத்திய அமைச்சர்கள், மடாதிபதிகள், சாதுக்கள், பல்வேறு துறை பிரபலங்கள் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க உள்ளதால் அயோத்தி மாவட்டம் முழுவதும் போலீசாரின் முழுக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு இருந்தது. மேலும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதோடு 15 ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அயோத்தி ராமர் கோவில் சராயு நதிக்கரையில் அமைந்துள்ளதால் விபத்துகளை அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் நீச்சல் வீரர்கள், தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு வீரர்கள் அங்கு தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர். இன்று கும்பாபிஷேக நடக்கும் நிலையில் நேற்றைய தினம் அயோத்தி ராமர் கோவில் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் வண்ண விளக்குகளால் ஜொலிஜொலித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+