‛நாளை முதல் தரிசனம்’.. அயோத்தி ராமர் கோவிலுக்கு போறீங்களா? ஆண் - பெண்களுக்கான டிரஸ்கோட் இதுதான்
அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. நாளை முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இந்நிலையில் தான் அயோத்தி ராமர் கோவில் செல்லும் பக்தர்கள் அணிய வேண்டிய ஆடைகள் குறித்த விபரம் வெளியாகி உள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் நாகரா கட்டகலையுடன் பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. 2019ல் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் ராமர் கோவில் கட்டுமானத்துக்கான அடிக்கல்லை பிரதமர் மோடி 2020ல் நாட்டினார்.

மொத்தம் 3 அடுக்குகளாக ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. தற்போது முதல் தளத்தின் பணிகள் முழுவதமாக நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து இன்று கோலாகலமாக கும்பாபிஷேகம் நடந்து முடிந்தது. கும்பாபிஷேகத்துக்கான பூஜைகள் கடந்த 16ம் தேதி தொடங்கிய நிலையில் இன்று பிரான் பிரதிஷ்டை சடங்குகள் நடந்தது.
பிரதமர் நரேந்திர மோடி முன்னின்று இந்த சடங்குகளை செய்தார். கோவில் கருவறையில் கடந்த 18 ம் தேதி நிறுவப்பட்ட 5 வயது பால ராமர் சிலையின் பாதத்தில் பிரதமர் மோடி அமர்ந்து அர்ச்சகர் உதவியுடன் பிரான் பிரதிஷ்டை சடங்குகளை செய்தார். இதையடுத்து பால ராமர் சிலையின் கண்கள் திறக்கப்பட்டது. அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவான இன்று பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. விழாவுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்ட பிரபலங்கள் மட்டுமே விழாவில் பங்கேற்றனர்.
இருப்பினும் நாளை முதல் பொதுமக்கள் ராமர் கோவில் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இதனால் நாளை முதல் நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து பொதுமக்கள் ராமர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ய உள்ளனர். இதற்கிடையே தான் ராமர் கோவிலுக்கு செல்வோர் அணிந்து செல்ல வேண்டிய ஆடைகள் தொடர்பான ‛டிரஸ்கோட்' விபரம் வெளியாகி உள்ளது.
அதாவது ஆண், பெண் என இருபாலரும் நமது காலாசார பாரம்பரிய உடைகளை அணிய வேண்டும். ஆண்கள் என்றால் வேஷ்டி, சட்டை, குர்தா-பைஜாமா, சுடிதார், பேண்ட்டுடன் இணைந்த ஷெர்வானி (Sherwani) அல்லது அச்கான் (Achkan), முண்டு என அழைக்கப்படும் வேஷ்டி, பருத்தி ஆடைகள் உள்ளிட்டவற்றை அணியலாம். ஆடைகள் தளர்வாக இருக்க வேண்டும். மாறாக ஷார்ட்ஸ், டீசர்ட்ஸ், ஸ்லீவ்லெஸ் போன்ற ஆடைகளை அணியக்கூடாது.
பெண்கள் என்றால் புடவை அணியலாம். பருத்தி, பட்டு சேலைகளும் லைட் வண்ணத்தில் அணியலாம். இல்லாவிட்டால்
சல்வார் கமீஸ், லெஹெங்கா சோளி, பலாஸ்ஸோ சூட் அணியலாம். ப்ளவுசுடன் கூடி லாங்க் ஸ்கர்ட் (Long Skirt with Blouse) துப்பட்டாவுடன் அணியலாம். தோள்பட்டை மற்றும் முழங்கால் தெரியும் வகையிலான ஆடைகளையும், இறுக்கமான ஆடைகளையும் அணிவதை தவிர்க்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications