கார்கில் பேச்சு: ஆசம் கானுக்கு ராணுவ அதிகாரிகள் கடும் எதிர்ப்பு
பெங்களூர்: கார்கில் போரை வென்று கொடுத்தது முஸ்லீம் வீரர்கள் தான் என்று சமாஜ்வாடி கட்சி தலைவர் ஆசம் கான் தெரிவித்துள்ளதற்கு ராணுவ அதிகாரிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் நடந்த தேர்தல் பொதுக் கூட்டத்தில் பேசிய சமாஜ்வாடி கட்சி தலைவர் ஆசம் கான் 1999ம் ஆண்டு நடந்த கார்கில் போரில் இந்தியா வெல்ல முஸ்லீம் ராணுவ வீரர்கள் தான் காரணம் என்று கூறினார்.
இதையடுத்து பெங்களூரில் வசிக்கும் ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி ஏர் மார்ஷல் பி.கே. பாண்டே ஒன் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

கார்கிலை எல்லைக்கு அந்த பக்கம் இருந்த முஸ்லீம்கள் ஆக்ரமித்தனர். இந்திய வீரர்களின்(இந்து மற்றும் முஸ்லீம்கள்) வீரத்தால் அவர்களால் கார்கிலில் நிலைத்து நிற்க முடியவில்லை.
ஆசம் கான் முஸ்லீம்களின் வாக்குகளை பெற இவ்வாறு கூறியிருந்தால் அவருக்கு அதில் வெற்றி கிடைக்காது. நம் நாட்டு மக்களுக்கு உண்மை என்னவென்பது தெரியும்.
ஒரு வீரர் தனது பயிற்சியை முடித்த உடன் நடக்கும் விழாவில் பகவத் கீதை, குர்ஆன், பைபிள் மற்றும் குரு கிராந்த் சாஹிப் என அனைத்து மத நம்பிக்கைகள் மீதும் வாக்குறுதி எடுத்துக் கொள்கிறார். ராணுவ வீரர் இந்துவா, முஸ்லீமா, கிறிஸ்துவரா அல்லது சீக்கியரா என்பது முக்கியம் இல்லை என்றார்.
மற்றொரு ராணுவ உயர் அதிகாரி கூறுகையில்,
இந்திய அரசியல்வாதிகள் இவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொள்கிறார்கள். பொறுப்பற்ற வார்த்தைகளை விடும் முன்பு அவர்கள் யோசிப்பது கூட இல்லை. அவர் எப்படி இவ்வாறு தெரிவிக்கலாம்? அவருக்கு துணிவு இருந்தால் இந்திய எல்லைக்கு சென்று வீரர்கள் எப்படி இரவு, பகல் பாராது கடுங்குளிரில் பணிபுரிகின்றனர் என்பதை பார்க்கட்டும்.
தேசிய பாதுகாப்பு அகாடமியிலோ அல்லது இந்திய ராணுவ அகாடமியிலோ ஒருவரை சேர்க்கையில் அவருக்கு மதநல்லிணக்கம் பற்றி கற்றுக் கொடுக்கப்படுகிறது என்றார்.
ஆசாம் கானின் பேச்சுக்கு காசியாபாத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரும், முன்னாள் ராணுவ தளபதியுமான வி.கே. சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
கார்கில் போர் இந்தியர்களால் வெல்லப்பட்டது. ராணுவத்தில் சாதி, மதம் பற்றி பேசுவது கண்டனத்திற்குரியது. போர் இந்தியர்களால் வெல்லப்பட்டதே தவிர எந்த ஒரு சாதி, மத, இனத்தவரால் வெல்லப்படவில்லை என்றார்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications