பாபர் மசூதி இடிப்பு.. இவ்ளோ வருஷத்துக்கு அப்புறம்… அத்வானி மீது இன்றுதான் குற்றசாட்டு பதிவாம்?
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாஜக மூத்த தலைவர் அத்வானி மீது சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
லக்னோ: பாபர் மசூதி இடிப்பு வழக்கில், பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்டோர் மீது லக்னோவில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் இன்று குற்றச்சாட்டு பதிவு செய்ய உள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பழமை வாய்ந்த பாபர் மசூதி கடந்த 1992ம் ஆண்டு டிசம்பர் 6ந் தேதி ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்துத்துவ அமைப்பினரால் இடிக்கப்பட்டது. இது தொடர்பாக லக்னோ சிறப்பு கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பாக, பாஜக தலைவர்கள் அத்வானி, உமா பாரதி, முரளி மனோகர் ஜோஷி, கல்யாண் சிங் உள்ளிட்ட 13 பேர் மீது சதி குற்றச்சாட்டப்பட்டது. இவர்களை, ரேபரேலி சிறப்பு நீதிமன்றம் வழக்கிலிருந்து விடுவித்தது. அலகாபாத் உயர் நீதிமன்றமும் அதை உறுதி செய்தது.

மேல்முறையீடு
இதனை எதிர்த்து, சி.பி.ஐ. தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை தொடங்கி 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஒரு சம்பவத்தில் இருவேறு நீதிமன்றகளில் விசாரணை நடத்தக்கூடாது என உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், அத்வானி உள்ளிட்டோர் மீதான குற்றச்சதி வழக்கையும் லக்னோ சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி கடந்த மாதம் 19-ந் தேதி உத்தரவிட்டது.

சி.பி.ஐ நீதிமன்றம்
இந்த வழக்கை லக்னோ சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தினமும் விசாரித்து, 2 ஆண்டில் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று கடந்த மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை, லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.யாதவ் முன்னிலையில் கடந்த 20ம் தேதி தொடங்கியது.

விஎச்பி தலைவர்கள் ஆஜர்
அப்போது நீதிமன்ற சம்மன் பெற்ற, 59 வயதான ராம் விலாஸ் வேதாந்தி, 71 வயதான சம்பத் ராய், 88 வயதான பைகுந்த் லால் ஷர்மா, 79 வயதான மகந்த் நிரித்யா கோபால் தாஸ், 68 வயதான தரம்தாஸ் மகாராஜ் ஆகிய 5 விஸ்வ இந்து பரிஷத் தலைவர்கள் நேரில் ஆஜராகினர். 6வது குற்றவாளியான சதிஷ் பிரதான் ஆஜராகவில்லை. நேரில் ஆஜரான 5 விஸ்வ இந்து பரிஷத் தலைவர்களுக்கும் நீதிபதி எஸ்.கே.யாதவ் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

அத்வானி மீது குற்றச்சாட்டுப் பதிவு
இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கில் இன்று லக்னோ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அத்வானி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மீது சிபிஐ, இன்று குற்றச்சாட்டுகளை பதிவு செய்கிறது. பல ஆண்டுகளுக்கு கழித்து, ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அத்வானி மீது குற்றச்சாட்டு பதிவு என்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications