அந்தமானில் அடுத்தடுத்து 3 நிலநடுக்கம்.. அதுவும் கடலுக்கு அடியே.. அச்சத்தில் பொதுமக்கள்! ஷாக்
அந்தமான்: அந்தமான் மற்றும் நிகோபார் தீவு பகுதியில் அடுத்தடுத்து கடலுக்கு அடியே ஏற்பட்ட மூன்று நிலநடுக்கங்களால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கடந்த பிப். மாதம் துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கத்தை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறக்க முடியாது. பல ஆயிரம் இந்த மோசமான நிலநடுக்கத்தால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

அதன் பிறகு பல்வேறு இடங்களிலும் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டே வருகிறது. இந்தச் சூழலில் அந்தமான் நிகோபார் பகுதியில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கம்: இப்படி கொஞ்ச நேர இடைவெளியில் அடுத்தடுத்து 3 நிலநடுக்கம் கடலுக்கு அடியே ஏற்பட்டதால் மக்கள் பதற்றமடைந்துள்ளனர். ரிக்டர் அளவில் 4.9, 4.1 மற்றும் 5.3 எனத் தொடர்ச்சியாக 3 நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நிக்கோபார் தீவுகளில் இன்று பிற்பகலில் சில மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து 3 நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. முதல் நிலநடுக்கம் மதியம் 1 மணியளவிலும் அதைத் தொடர்ந்து சற்று நேரத்தில் அடுத்த இரு பூகம்பங்களும் ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 4.9ஆக பதிவான முதல் நிலநடுக்கம் 1.16 மணியளவில் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து மாலை 2.59 மணியளவில் 4.1 ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும், 5.3 ரிக்டரில் மற்றொரு நிலநடுக்கம் 4.01 மணிக்கு ஏற்பட்டுள்ளது.
சுனாமி எச்சரிக்கை உண்டா: நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதமோ, உயிர்ச்சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை. இதுவரை சுனாமி எச்சரிக்கை குறித்து எந்தவொரு தகவலும் வெளியிடப்படவில்லை.
இருப்பினும், அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்கள் காரணமாகப் பொதுமக்கள் அஞ்சினர். கட்டிடங்கள் தொடர்ச்சியாகக் குலுங்கியதால், பொதுமக்கள் சாலைகளில் தஞ்சம் புகுந்தனர்.
அடிக்கடி நிலநடுக்கம் ஏன்: அந்தமான்- நிக்கோபார் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வாடிக்கையான ஒன்றாகவே இருக்கிறது. அது பூமியில் அமைந்துள்ள இடம் காரணமாகவே நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரழிவுகளால் அது அதிகம் பாதிக்கப்படுகிறது.
அந்தமான் பகுதி இமயமலை மோதல் மண்டலத்தில் ( Himalayan collision zone) அமைந்துள்ளதால் அங்கே அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. அது நிலநடுக்க மண்டலத்தில் ஜோன் 5இல் உள்ளது. அதாவது அங்கே அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.












Click it and Unblock the Notifications