சாலைகளில் மேடு, குழி, பள்ளங்கள்... 2015-ல் மட்டும் 10,727 பேர் பலி என அதிர்ச்சி தகவல்
புதுடில்லி: நாட்டில் கடந்த 2015-ம் ஆண்டு மட்டும் மோசமான சாலைககள் மற்றும் சாலைப் பணிகள் உள்ளிட்டவற்றின் காரணமாக ஏற்பட்ட விபத்தில் சிக்கி 10,727 பேர் உயிரிழந்துள்ளனர் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
இது குறித்து மத்திய போக்குவரத்து அமைச்சகத்தில் சாலை விபத்துக்கள் குறித்த ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது: மோசமான சாலைகள், சாலை பணிகள் மற்றும் வேகத்தடைகள் ஆகியவற்றின் காரணமாக கடந்த 2015-ம் ஆண்டில் மட்டும் 10,727 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக இந்த உயிரிழப்பானது கடந்த 2014-ம் ஆண்டுடன் ஒப்பிடப்படும் போது சற்று குறைந்துள்ளது.

மோசமான சாலைகள் காரணமாக மட்டும் ஏற்பட்ட உயிரிழப்புகள் 3,039-ல் இருந்து 3,416-ஆக அதிகரித்துள்ளது. மகராஷ்ட்ரா மாநிலத்தில் மட்டும் மோசமான சாலைகள் காரணமாக ஏற்படும் விபத்துகள் 7 மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு 124 பேர் உயிரிழந்த நிலையில், கடந்த 2015-ம் ஆண்டு உயிரிழப்பின் எண்ணிக்கை 812-ஆக அதிகரித்துள்ளது.
உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் குறிப்பிடும் படியாக மோசமான சாலையினால் ஏற்படும் விபத்துகள் கடந்த 2014-ம் ஆண்டை ஒப்பிடும் போது, கடந்த ஆண்டு 50 சதவீதம் குறைந்துள்ளது. அதேசமயம் டெல்லியில் மோசமான சாலைகளால் 2 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கடந்த ஆண்டில் மட்டும் மேசமான சாலைகள் காரணமாக 10,876 விபத்துகள் நிகழ்ந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரியாக பராமரிக்கப்படாத பாதாள சாக்கடைகளால் கழிவுநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுவதும் பல விபத்துக்களுக்கு காரணமாக கூறப்படுகிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications