மனைவி சடலத்தை சுமந்த கணவர்.. பஹ்ரைன் பிரதமரின் துடிப்பு மோடியிடம் இல்லையே?
டெல்லி: ஒடிஷாவில் மனைவியின் சடலத்தை தோளில் சுமந்து சென்ற நபருக்கு பஹ்ரைன் பிரதமர் நிதியுதவி செய்துள்ளார். ஆனால் நம் பிரதமர் மோடி அது குறித்து கண்டுகொள்ளவே இல்லை.
ஒடிஷா மாநிலத்தில் உள்ள காலாஹன்டி அரசு மருத்துவமனையில் காசநோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார் தானா மாஜ்ஹி என்பவரின் மனைவி அமாங் டெய்(42). அவர் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

மருத்துவமனை அமாங்கின் உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்ல வாகன வசதி செய்து தரவில்லை. ஏழையான தானாவால் வாகனத்திற்கு பணம் கொடுக்க முடியவில்லை. இதனால் அவர் தனது மனைவியின் சடலத்தை தனது தோளில் சுமந்து 10 கிலோமீட்டர் நடந்து சென்றார்.
இந்நிலையில் இந்த செய்தி குறித்து அறிந்த பஹ்ரைன் பிரதமர் இளவரசர் கலிபா பின் சல்மான் அல் கலிபா மிகவும் வேதனை அடைந்துள்ளார். தானா மாஜ்ஹிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்த அவர் பஹ்ரைனில் உள்ள இந்திய தூதரகத்திடம் பணம் கொடுத்து அதை வறுமையால் வாடும் தானாவிடம் அளிக்குமாறு தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் வாடும் ஒருவரின் நிலை கண்டு பஹ்ரைன் பிரதமர் வேதனை அடைந்து நிதியுதவி செய்துள்ளார். ஆனால் இங்கே டெல்லியில் இருக்கும் நம் பிரதமர் நரேந்திர மோடி இது குறித்து கண்டுகொள்ளவில்லை. பஹ்ரைன் பிரதமருக்கு தெரிந்த செய்தி மோடிக்கு தெரியாமலா போயிருக்கும்.
சடலத்தை கொண்டு செல்லக் கூட பணம் இல்லாத தானா மூன்று வேளை சாப்பிட்டு வாழ மோடி ஏதாவது வழி செய்தால் நன்றாக இருக்கும். ஆனால் மோடி இதை செய்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications