For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அன்னிய செலாவணி மோசடி வழக்கில் தயாளு அம்மாள், கனிமொழி, ராசாவுக்கு ஜாமீன்

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: 2ஜி ஊழலுடன் தொடர்புடைய அன்னிய செலாவணி மோசடி வழக்கில் திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளை அடுத்து முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி. கனிமொழி ஆகியோருக்கும் டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

2ஜி ஸ்பெக்டர்ம் ஒதுக்கீட்டின் மூலம் ரூ.200 கோடியை கலைஞர் டிவி பெற்றது தொடர்பாக அதன் பங்குதாரராக இருந்த திமுக எம்.பி. கனிமொழி கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இது குறித்த வழக்கு டெல்லியில் உள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் கலைஞர் டிவியின் பங்குதாரர்களில் ஒருவரும், திமுக தலைவர் கருணாநிதியின் மனைவியுமான தயாளு அம்மாள் சாட்சியாக சேர்க்கப்பட்டு அவரிடம் சாட்சியம் பெறப்பட்டது.

Bail For DMK Chief Karunanidhi's Wife Dayalu Ammal in Money-Laundering Case

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கலைஞர் டிவி ரூ. 200 கோடி பெற்றது தொடர்பாக தயாளு அம்மாள், முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா மற்றும் கனிமொழி மீது அமலாக்கப் பிரிவினர் அன்னிய செலாவணி மோசடி வழக்குப்பதிவு செய்தனர். இது குறித்த குற்றப்பத்திரிக்கையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த அன்னிய செலாவணி மோசடி வழக்கில் ஜாமீன் கோரி தயாளு அம்மாள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த டெல்லி நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி இன்று காலை உத்தரவிட்டது.

மேலும் இந்த வழக்கில் ஜாமீன் கோரிய கனிமொழி மற்றும் ஆ.ராசாவின் மனுக்கள் மீது இன்று மதியம் விசாரணை நடந்தது. மனுக்களை விசாரித்த நீதிமன்றம் ராசா, கனிமொழி மற்றும் 15 பேருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. ஜாமீன் கிடைத்துள்ளதால் கைதாகும் அபாயத்தில் இருந்து ராசா மற்றும் கனிமொழி ஆகியோர் தப்பியுள்ளனர்.

2ஜி ஊழல் வழக்கில் கைதான ஆ.ராசாவும் கனிமொழியைப் போன்று ஜாமீனில் தான் வெளியே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A delhi court has granted bail to DMK supremo Karunanidhi's wife Dayalu Ammal in a money-laundering case linked to the 2G spectrum scam. After Dayalu Ammal, former telecom minister A. Raja and DMK MP Kanimozhi also get bail in the same case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X