சட்டசபைக்குள் விசில் ஊதி அட்டகாசம் செய்த பாலகிருஷ்ணா.. தினமும் ஒரு ரூபம்.. அமளியால் முடங்கும் அவை!

Subscribe to Oneindia Tamil

அமராவதி: ஆந்திர மாநில சட்டசபையில் தெலுங்கு நடிகரும், தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏவுமான நந்தமுரி பாலகிருஷ்ணா விசில் அடித்து அமளியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவில் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக இருந்தார். அவரது பதவிக்காலத்தில் திறன் மேம்பாட்டு கழகத்தின் நிதியில் ரூ.550 கோடி வரை ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக மாநில குற்றப் புலனாய்வுத் துறை கடந்த சில ஆண்டுகளாக விசாரணை நடத்தி வந்த நிலையில், கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி அதிகாலை 3.30 மணி அளவில் சந்திரபாபு நாயுடுவை போலீசார் கைது செய்தனர்.

Balakrishna blows whistle in Andhra Assembly to protest Chandrababu naidus arrest

சந்திரபாபு நாயுடுவிடம் சுமார் 10 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து அவரை 14 நாட்கள், அதாவது செப்டம்பர் 22ஆம் தேதியான இன்று வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது அவர் ராஜமுந்திரி மத்திய சிறையில் இருந்து வருகிறார். சந்திரபாபு நாயுடு கைது நடவடிக்கையைக் கண்டித்து தெலுங்கு தேசம் கட்சியினர் ஆந்திராவில் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

சந்திரபாபு நாயுடு கைது ஆந்திர மாநில சட்டப்பேரவையிலும் எதிரொலித்தது. நேற்று சட்டப்பேரவைக்கு வந்த தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சபாநாயகர் இருக்கை அருகில் சென்று பேப்பர்கள் மற்றும் குடிநீர் பாட்டில்களை வீசி அமளியில் ஈடுபட்டனர்.

அப்போது இந்துபுரம் தொகுதி தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏவும் நடிகருமான நந்தமுரி பாலகிருஷ்ணா எழுந்து நின்று ஆந்திர நீர்வளத்துறை அமைச்சர் அம்பதி ராம்பாபுவை நோக்கி தொடையைத் தட்டியும், மீசையை முறுக்கியும் சவால் விடும் வகையில் ஆவேசமாக சைகை செய்தார். இதனால் சட்டசபையில் பரபரப்பு ஏற்பட்டது.

எம்.ல்.ஏ பாலகிருஷ்ணாவின் இந்த செயலை கண்டித்த சபாநாயகர் தம்மினெனி சீதாராம், "இதை பாலகிருஷ்ணாவின் முதல் தவறாக கருதி அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. அவையின் விதிமுறைகளை மீறி உறுப்பினர் யாரேனும் அநாகரிகமாக நடந்து கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார். தெலுங்கு தேசம் எம்எல்ஏக்கள் 15 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், இன்றும் சட்டப்பேரவையில் தெலுங்கு தேசம் உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இன்று கேள்வி நேரம் தொடங்கியவுடன், தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏக்கள், சபாநாயகர் தம்மினேனி சீதாராமை சூழ்ந்து கொண்டு சபாநாயகர் மேடையை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்டனர்.

இன்று, கையோடு விசில் ஒன்றைக் கொண்டு வந்த தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ பாலகிருஷ்ணா, அந்த விசிலை சத்தமாக ஊதி தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+